புதினங்களின் சங்கமம்

வவுனியாவில் பெற்றதாயால் கொலை செய்யப்பட்ட பிள்ளைகள்!! நடந்தது என்ன? (Video)

Image may contain: one or more people and people standing
Image may contain: one or more people
Image may contain: 1 person, standing and text
எஸ். தவபாலன்

இந்தக்கூட்டுப்பொறுப்பை எல்லோரும் ஏற்றாகவேண்டும்….

வளர்த்து ஆளாக்கி அழகான உடையுடுத்து அழகும் பார்க்கும் நேரத்தில் பெற்ற தாயே எமனாகி தண்ணீரில் தள்ளிவிட்ட கொடூரம்
நேற்று முன்தினம் பட்டிக்குடியிருப்பில் நடந்தேறியது.

வாழ்க்கையில் வண்ணத்துப்பூச்சிகளாய் சிறகடித்து பறந்த சிட்டுக்கள் இவர்கள்.
நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பு எனும் கிராமத்தில் பட்டாம்பூச்சிகளாய் பறந்து திரிந்தவர்களின் வாழ்க்கை பட்டென்று பறந்துபோனது சொல்லிலடங்காத வேதனை.

Image may contain: 1 person, standing and text

இந்த அவலத்திற்கு தாய் மட்டுமா காரணம்?
இல்லை சமூகப்பொறுப்புடைய நாம் அனைவருமே காரணம் என்பேன்.

கணவன் இறந்த துயரம் வாழ்க்கையில் இளவயதுப்பெண்ணாக இரண்டு பிள்ளைகளுடன் எதிர் நீச்சலடிக்க இயலாத பலவீனம்,வறுமை,விரக்தி எல்லாம் சேர்ந்து பிள்ளைகளைக்கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலைக்கு கொண்டு சென்றுவிட்டிருக்கிறது அந்த இளம் தாயை. தாய் காப்பாற்றப்பட்டார் பிள்ளைகள் மூச்சடங்கி மரணித்திருக்கிறார்கள் என்பது ஆகப்பிந்திய துயரம்.

ஒருதாய் தான்பெற்று வளர்த்த பிள்ளைகளை கொல்ல நினைக்கிறாள் என்றால் தாயின் மன உளைச்சலை/துயரத்தை இலகுவாக கணித்திடமுடியும்.
அவ்வாறாயின் இந்த துயரத்திற்கு தாய்மட்டும் காரணம் என நாம்குற்றம் சாட்டிவிட முடியுமா?

ஒருவீட்டில் மரணம் நிகழ்ந்தால் மரணம் நிகழ்ந்து நான்கைந்து நாட்கள் குறித்த மரணவீட்டுக்கு படையெடுக்கும் நாம் அதன் பின்னர் அந்த வீட்டை எட்டிப்பார்ப்பதில்லை இது எங்கள் தேசத்தின் தேசவழமை யாகிவிட்டது. குறித்த ஒரு வீட்டில் எதிர் பாராத ஒரு மரணம் நிகழ்ந்தால் அதுவும் மரணித்தவர் குடும்பத்தின் தலைவனாகயிருந்தால் அந்த குடும்பத்தின் பொருளாதார நிலையென்ன கணவன்/அல்லது குடும்பத்தலைவனில்லாது ஒரு பெண் குறித்த தனது குடும்பத்தையும் பிள்ளைகளையும் எவ்வாறு முன்னேற்றுவாள் என்பது பற்றியெல்லாம் நாம் அலட்டிக்கொள்வதில்லை அதையும் தாண்டிய அபத்தும் கணவனில்லாத அந்த வீட்டில் அடுப்பெரிகிறாதா என்று கூட சிலநாட்களின் பின்னர் அயலவர்கள் எட்டிப்பார்ப்பதில்லை? மரணவீட்டுடன் பல நெருங்கிய உறவுகள் கூட மரணம் நிகழ்ந்த வீட்டை மறந்துவிடுகிறார்கள்.சரி குறித்த குடும்பத்திற்கு உதவத்தான் முடியாது பணம் பொருளில்லை என்றாலும் அந்த வீட்டுக்கு சென்று ஆற்றுப்படுத்தி ஆதரவு கூறக்கூட எம்மில் ஒருவரும் தயாராகவில்லையே என்பது ஆகப்பிந்திய வேதனையே.

Image may contain: one or more people

பட்டிக்குடியிருப்பில் நிகழ்ந்த துயரம் அவ்வாறானதே. இந்த மாதத்தின் முதல் வாரத்தில் விபத்தின் போது திடீர் மரணமடைந்த கணவனின்/ குடும்பத்தலைவனின் இழப்பினால் குறித்த குடும்பம் ஈடாடிப்போய்விடுகிறது. கணவனைப்பறிகொடுத்த துயரம் விரக்தி ஆற்றுப்படுத்தி ஆதரவு தர யாருமில்லாத நிலை கணவன் இறந்து மூன்று வாரங்கள் கடந்துவிட்ட நிலையில் தனது இரண்டு பிள்ளைகளையும் உணவளித்து பராமரிக்க முடியாத வறுமை எல்லாம் ஒருங்கே சேர்ந்து குறித்த இளம்தாயை தற்கொலை மனநிலைக்கு மாற்றிவிடுகிறது. குறித்த சம்பவம் நடைபெறுவதற்கு முதல் நாள் கனகராயன் குளத்திலுள்ள தனது சகோதரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான்; பிள்ளைகளையும் நிறைகிணத்தில் தள்ளிவிட்டு தானும் மரணிக்க போவதாக கூறியுள்ளாள் குறித்ததாய். கணவன் இறந்த விரக்தியிலே தனது தங்கை இவ்வாறு புலம்புவதாக நினைத்து அவரை ஆறுதல் படுத்திவிட்டு தொலைபேசியை துண்டித்துள்ளார் தமக்கையார். மறுநாள் சொன்னதைப் போலவே தனது சகோதரி தற்கொலை செய்துவிடுவார் என்று எள்ளளவும் நம்பவில்லை என்கிறாள் தமக்கை.

ஆக எல்லாம் நடந்தேறிவிட்டது. கணவனின் இழப்பு ஒருபுறம் பிள்ளைகளை தானே பலியாக்கிவிட்டேனே என்ற மனக்குடைச்சல் தோப்பாக வாழ்ந்து தற்போது தனித்த மரமாகியது எல்லாம் சேர்ந்து குறித்த பெண்ணையும் மீண்டுமொரு விபரீத முடிவுக்கு இட்டுச்சென்றுவிடும் என்பதால் சமூகப்பொறுப்புணர்ந்து நடக்கவேண்டியது நம் எல்லோரதும் கடமையாகும்.

ஐந்து நாட்களாக ஆழ்துளைக்கிணற்றில் வீழ்ந்த சிறுவனை மீட்டிட வேண்டுமென்று பிரார்த்தித்த உலகம் குறித்த சிறுவன் ஆழ்துளைக்கிணற்றில் வீழ்ந்ததற்கு சிறுவனின் தாய் தந்தையை குற்றம் சாட்டியது. ஆனால் சிறுவனின் மரணத்திற்கு குடும்பம் மட்டும் பொறுப்பல்ல ஒட்டுமொத்த சமூகமுமே காரணம் என்பதைப்போல பட்டிக்குடியிருப்புத்துயரிற்கும் தாய்மட்டும் காரணமல்ல சமூகப்பொறுப்புடைய நாம் அனைவரும் தான் காரணம் எனும் கூட்டுப்பொறுப்பை ஏற்று எனிவரும் காலங்களில் எமது தேசத்தில் இவ்வாறான துயர்கள் ஏற்படாதிருக்க அனைவரும் பொறுப்புடன் செயற்படுவோம்.

நன்றி
எஸ்.தவபாலன்

Image may contain: one or more people and people standing