புதினங்களின் சங்கமம்

நிந்தவூரில் தற்கொலை தாக்குதலுக்கு பயன்படுத்தும் அங்கிகள் மீட்பு

அம்பாறை நிந்தாவூர் பிரதேசத்தில் தற்கொலைதாரிகள் இருப்பதாக கிடைத்த தகவலின்படி வீடொன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது தற்கொலை தாக்குதலுக்கு பயன்படுத்தும் அங்கிகள், வெடிபொருள்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

இன்று நடத்தப்பட்ட சொதனையின் போது சிறிய தகடுகள், மேலும் சில பொருட்களும்,பதிவு செய்யப்படாத வாகனமொன்றும் மீட்கப்பட்டுள்ளது.

கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய பொலிஸார் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் இணைந்து இந்த சோதனையை நடத்தியுள்ளனர்.