வைத்தியரான தாயின் நகையைத் திருடி பக்கத்து வீட்டு குடும்பப் பெண்ணிடம் கொடுத்து 17 வயது சிறுவன் உல்லாசம்!!
சிங்கள சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்.
தனது தாயில் சங்கிலியைத் திருடி எடுத்து அயல் வீட்டுப் பெண்ணிடம் கொடுத்து அவளுடன் உல்லாசமாக இருந்த 17 வயதுச் சிறுவனை பொலிசார் கைது செய்து விடுவித்துள்ளனர். இரத்தினபுரியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வைத்தியரான தாயார் கண்ணாடி மேசையில் கழற்றி வைத்திருந்த 2 பவுண் பெறுமதியான சங்கிலி காணாமல் போயுள்ளது. இது தொடர்பாக பொலிசாரிடம் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டிருந்தது. பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின் போது குறித்த வீட்டின் சிசிரிவி ஒவ்வொரு நாட்களும் சில மணி நேரங்கள் தொழிற்படாது இருந்துள்ளது. வைத்தியரின் மகன் பாடசாலையில் இருந்து வீடு வந்து ஒரு சில மணித்தியாலங்களே சிசிரிவி தொழிற்படாது இருந்ததால் சந்தேகமடைந்த பொலிசார் சிசிரிவி தொழிற்படாத குறித்த நேரங்களை வைத்து அயல் பகுதி சிசிரிவியை பரிசோதனை செய்த போது மாணவனின் வீட்டுக்கு பெண் ஒருவர் பல தடவைகள் சென்று வந்துள்ளதை அவதானித்து அந்தப் பெண் தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்ட போது அந்தப் பெண் வைத்தியரின் வீட்டுக்கு அருகில் வசிப்பவர் என்பதை அறிந்த பின் மாணவனிடம் விசாரணைகள் மேற்கொண்ட பின் அப் பெண்ணிடமும் விசாரணைகள் மேற்கொண்ட போது சங்கிலி மாணவனிடமிருந்து பெறப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. 34 வயதான கணவனை இழந்த 2 பிள்ளைகளின் தாயாரான குறித்த பெண்ணும் மாணவனும் வைத்தியர் இல்லாத நேரங்களில் வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளது தெரியவந்துள்ளது. இதன் பின்னர் மாணவனையும் பெண்ணையும் பொலிசார் கைது செய்தனர். இதனையடுத்து வைத்தியர் தான் கொடுத்த முறைப்பாட்டை மீளப்பெற்று இருவரையும் விடுவித்துள்ளதாகத் தெரியவருகின்றது.

