புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இன்றைய இராசி பலன்கள்(16.08.2026)

மேஷம்

இன்று மற்றவர்களை நன்றாக புரிந்து கொண்டு அன்புடன் பழகுவீர்கள். மருத்துவ செலவு ஏற்படக்கூடும். வீடு, பூமி மூலம் வரவேண்டிய வருமானம் தாமதப்படலாம். வாழ்க்கை துணையுடன் விவாதம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

ரிஷபம்

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலையும் காரிய தாமதத்தையும் சந்திக்க வேண்டி இருக்கும். வியாபார போட்டிகள் குறையும். பணவரத்து இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். உறவினர்கள் வருகை இருக்கும். குடும்ப செலவு அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மிதுனம்

இன்று வெளியூர் பயணங்களின்போது கவனம் தேவை. அடுத்தவர்களுக்காக பொறுப்புகளை ஏற்கும்போது ஒரு முறைக்கு பலமுறை யோசித்து முடிவு எடுப்பது நல்லது. பணவரத்து திருப்தி தரும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கடகம்

இன்று புதிய நபர்களிடம் எச்சரிக்கை தேவை. மாணவர்கள் வீண் அலைச்சலை குறைத்துக்கொண்டு பாடங்களில் கவனம் செலுத்துவது நல்லது. பெரியோர்களின் உதவியும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். மனதில் தைரியம் தன்னம்பிக்கை உண்டாகும். துணிச்சலுடன் எந்த காரியத்திலும் ஈடுபட்டு சாதகமாக செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

சிம்மம்

இன்று தொழில் வியாபாரம் திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் இருக்கும். புதிய ஆர்டர்கள் வியாபார விரிவாக்கம் கைகூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வருமானம் அதிகம் கிடைக்க பெறுவீர்கள். வராது என்று எண்ணிய பணம் வந்து சேரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

கன்னி

இன்று கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். வாழ்க்கை துணையினால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். சகோதர வழியில் வேண்டிய உதவி கிடைக்கும். பிள்ளைகள் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். மனோ தைரியம் கூடும். துணிச்சலுடன் எந்த காரியத்திலும் ஈடுபட்டு சாதகமாக செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

துலாம்

இன்று உடல் ஆரோக்கியம் உண்டாகும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் வேகம் இருக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு எதிலும் வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு எதிலும் வெற்றிகள் குவியும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

விருச்சிகம்

இன்று சாதுர்யமாக பேசி மற்றவர்களிடம் வேலை வாங்குவீர்கள். உடல்நிலை சுக சௌக்கியம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் அடையும். சமூகத்தில் மரியாதை உயரும். பணவரத்து பலவழிகளில் இருக்கும் அதே நேரத்தில் செலவும் வரும். வாக்கு வன்மையால் புகழ் கூடும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

தனுசு

இன்று தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். கொடுத்த கடன் வசூலாகும். புதிய நபர்களை நம்பி எதையும் செய்யும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டு பயணம் திட்டமிட்டபடி அமையும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

மகரம்

இன்று அரசாங்கம் தொடர்பான வேலைகள் தடையின்றி நடக்கும். குடும்பத்தில் திடீர் மகிழ்ச்சி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை காணப்படும். உறவினர்களுடன் சுமூகமான போக்கு காணப்படும். அவர்களால் நன்மையும் உண்டாகும். நீண்ட தூர தகவல்கள் நல்ல தகவல் தரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

கும்பம்

இன்று பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். உங்களது செயல்களை மற்றவர்கள் பாராட்டுவார்கள். மரியாதையும் அந்தஸ்தும் அதிகரிக்கும். புதிய நபர்களிடம் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். விடுமுறை கால கல்வி கற்க ஆர்வம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

மீனம்

இன்று ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனம் தேவை. வெளிநாடு வாய்ப்புகள் வந்து சேரும். குருவை வணங்குங்கள். மனதில் தைரியமும் புதிய உற்சாகமும் உண்டாகும். புதிய முயற்சிகளில் இழுபறியான நிலை காணப்படும். நிர்பந்தத்தின் பேரில் மனதுக்கு பிடிக்காத வேலை செய்ய வேண்டி இருக்கலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x