புதினங்களின் சங்கமம்

இரத்தினபுரியில் தனிமையில் வாழ்ந்த அழகிக்கு நடந்தது என்ன?

இரத்தினபுரி, கொடிகமுவ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தனியாக வசித்து வந்த அழகான யுவதி சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வருடங்களில் சித்திரை புத்தாண்டு அழகியாக முடி சூடிய கே நிசன்சலா சந்தமாலி – வயது 32 என்பவரின் மரணம் தொடர்பாக இரத்தினபுரி பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுக்கின்றனர்.

பொலிஸ் தகவலின்படி, இந்த யுவதி ண் நீண்ட காலமாக இந்த வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். அவர் வசித்து வந்த வீட்டின் பிரதான நுழைவாயில் வழக்கமாக எப்போதும் மூடப்பட்டிருக்கும்.

எனினும், கடந்த 7ஆம் திகதி முதல் அந்தக் கதவு தொடர்ந்து திறந்தே காணப்பட்டதை அவதானித்த அயலவர்கள் சந்தேகம் அடைந்து உடனடியாக தகவல் வழங்கியுள்ளனர்.

அந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் வீட்டைச் சோதனையிட்டபோது, யுவதி படுக்கையில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.

அவர் உயிரிழந்து காணப்பட்ட வேளையில், உடலின் மேற்பகுதியில் மட்டும் டி-ஷர்ட் அணிந்திருந்ததாகவும், கீழ்ப் பகுதியில் ஆடை இல்லாத நிலையில் இருந்ததாகவும் ஆரம்பக் கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x