புதினங்களின் சங்கமம்

யாழ் நயினாதீவு அதிபர் திட்டமிட்டு கடலுக்குள் வைத்து கொல்லப்பட்டாரா? உறவினர்கள் சந்தேகம்!! நடந்தது இதுவா?

யாழ் நயினாதீவு அதிபர் கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பலியான செய்த அனைவரும் அறிந்ததே. இச் சம்பவத்தில் தற்போது படகைச் செலுத்திய நபர் சிறைகுள் அடைக்கப்பட்டார். ஆனால் படகில் இன்னொரு நபரும் அதிபருடன் சென்றுள்ளார். அவருக்கும் அதிபருக்கும் ஏற்கனவே கடும் முரன்பாடுகள் இருந்துள்ளனவாம். குறித்த நபரின் மனைவி ஒரு கிராமசேவகர். குறித்த நபர் நயினை நாகபூசணி அம்மன் கோவில் மற்றும் அப்பகுதியில் உள்ள கோவில்கள் நிகழ்வுகள் தொடர்பாக சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுவருபவர். அதிபர் கடலுக்குள் விபத்துக்குள்ளான போது இருந்த குறித்த நபர் தொடர்பாக புலம்பெயர் நயினாதீவு மக்களும் அதிபரின் உறவினர்களும் கடும் சந்தேகமடைந்துள்ளார்கள். அதிபர் கடலில் வீழ்ந்து மாயமான பின் அதிபரின் உடலை சுழியோடிகள் தேடிக் கொண்டிருந்த பேது கரைக்கு வந்த குறித்த நபர் எந்தவித பதற்றமும் இல்லாது யாருடனோ தொலைபேசியில் சிரித்துக் கதைத்துக் கொண்டிருந்ததாக நேரில் கண்டவர்கள் உறவினர்களுக்கு கூறியுள்ளார்கள்.

குறித்த நபரின் மனைவி விதானை என்றபடியால் அப்பகுதி மரணவிசாரணை அதிகாரி மற்றும் பொலிசார் ஆகியோரை தன் வசப்படுத்தி தனது கணவனை காப்பாற்றியிருக்கின்றார் என அதிபரின் உறவுகள் சந்தேகம் தெரிவித்துள்ளார்கள். நாளை அதிபரின் அந்தியேட்டி நிகழ்வு இடம்பெறவுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக உறவுகள் நியாயமான விசாரணைகளை நடாத்தி தமக்கு நீதி வழங்க வேண்டும் என கூறி ஊடகங்களுக்கு செய்தி அனுப்பியுள்ளார்கள்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x