யாழில் இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசியல்வாதியின் வாகனம் மற்றும் உதவியாளரும் பிடிபட்டனர்!! நடந்தது என்ன?
சுருக்கு வலைகளுடன் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் பிலிப்பையா அலெஸ்ரன் அவர்களுக்கு சொந்தமான வாகனம், அதில் கொண்டு செல்லப்பட்ட சுருக்கு வலைகளும் வெற்றிலை கேணி கடற்படையினரால் கைப்பற்றப் பட்டதுடன் அதில் பயணித்த உதவியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை 3:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
குறித்த பருத்திதுறை பிரதேச சபை உறுப்பினர் நீண்டகாலமாக சுருக்கு வலை தொழிலாளர்களுக்கு ஆதரவளித்துக்கொண்டு அதற்கு எதிராகவும் நடந்து கொள்வது போன்று குரலெழுப்பி வந்த நிலையில் இன்று அதிகாலை வசமாக மாட்டியுள்ளார்.
அண்மைக்காலமாக சட்ட விரோத சுருக்கு வலை தொழில் வடமராட்சி கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் நிலையில் கடர்ப்படையினர் நேற்றும் இன்றும் கரை ஓரமாக தேடுதல் நடத்தி வந்தனர். குறித்த பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் இலங்கை தமிழரசு கட்சியின் வடமராட்சி கிழக்கு அமைப்பாளர் என்பது குறிப்பிட தக்கது
இதேவேளை கைப்பற்ற பட்ட வாகனம், சுருக்குவலை, கைது செய்யப்பட்ட நபர் ஆகியோர் உரிய சட்ட நடவடிக்கைக்காக நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க படவுள்ளனர்.

