புதினங்களின் சங்கமம்

அம்பாறையில் கொடூரம்!! தமிழர் ஒருவர் தலை வெட்டிக் கொலை!! இரத்தத்தை போத்தலில் ஏந்திச் சென்றுள்ளார்கள்!!

அம்பாறை திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட நேருபுரம் தாண்டியடி மயாணப்
பிரதேசத்தில் ஆடுகள் மேய்க்க சென்ற 65வயது முதியவர் தலையின்றி சடலமாக நேற்று மாலை
மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் ஓருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாகவும் திருக்கோவில்
பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இவ் கொலை தொடர்பாக அம்பாறை தடயாய்வு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன்
அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி அவர்கள் சம்பவ இடத்திற்குச் நேற்றுவருகை தந்து
சடலத்தை பார்வையிட்டுள்ளார்

திருக்கோவில் நேருபுரம் கிராமத்தைச் சேர்ந்த கொலை செய்யப்பட்ட குறித்த நபர் நேற்று முன்
தினம் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் வீட்டில் இருந்து ஆடுகளை மேய்ப்பதற்காக
புறப்பட்டு சென்றுள்ளதுடன் மதிய உணவுக்கு வரமுடியாது மாலை 4.00 மணிக்கு வீட்டுக்கு
வருவதாக அவரது மனைவி ஆறுமுகம் பார்வதியிடம் தெரிவித்து சென்றவர் தலையின்றி சடலமாக
மீட்கப்பட்டுள்ளார் .

குறித்த நபர் தாண்டியடி மயாணப் பிரதேசத்தில் வைத்து சிறிய கட்டையினால் தாக்கப்பட்டு
கத்தியினால் வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த நபரின் தலை உடலில்
இருந்து அகற்றப்பட்டு தலையின்றி உடல் மாத்திரம் பொலிசாரியால் மீட்கப்பட்டுள்ளது.

முதியவரின் சடலத்தில் இருந்து சுமார் 50 தூரத்தில் கத்தியும், தண்ணீர் போத்தலும் ஒரு
துவிச்சக்கரவண்டியும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் திருக்கோவில் பொலிசார் தலையையும்
குற்றவாளிகளையும் தேடி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தலை வெட்டி கொலை செய்யப்பட்ட முதியவர் தாண்டியடி நேருபுரம் கிராமத்தைச் சேர்ந்த நான்கு
பிள்ளைகளின் தந்தையான மாரிமுத்து முனிசாமி வயது 65 என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்
இவர் ஜெயத்திலாவ இராணுவ முகாமில் சமயல் தொழில் புரிந்து ஓய்வு பெற்றவர் என்பதுடன் இவ்
கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

முதியவர் கொலை செய்யப்பட்டு அவருடைய தலை காணாமல் போயுள்ளதுடன் இரத்தம் எடுத்த நிலையில்
ஒரு பிளாஸ்டிக் போத்தல் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளமையானது பிரதேச மக்கள் மத்தியில் பீதியையும்
அச்சத்தையும் தோற்றுவித்தள்ளமையும் குறிப்பிடத்தக்கது.