புதினங்களின் சங்கமம்

போர்க்குற்றம் : ஐ.நா. அதிரடி; இலங்கை இராணுவம் நீக்கம்!

இலங்கை இராணுவத்தின் மீதான போர்க்குற்றச்சாட்டுகள் வலுவடைந்துள்ள நிலையில், அதற்கான பொறுப்புக் கூறவேண்டிய இலங்கையின் அசமந்தம் காரணமாக ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையிலிருந்து இலங்கை இராணுவத்தை நீக்குவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தின்போது, இலங்கை இராணுவம் பல்வேறு யுத்தக்குற்றங்களைப் புரிந்தமைக்கான சான்றுகள் பல உள்ளன. இதனால், அவர்கள் மீது விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாடு சர்வதேச அளவில் வலுப்பெற்றுள்ளது. இந்த நிலையில், போர்க்குற்றங்களுடன் தொடர்புடைய சவேந்திர சில்வா, ஜனாதிபதியால் அண்மையில் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

அவரது நியமனத்துக்கு தற்போது வரை ஐ.நா. உட்பட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. எனினும் அது குறித்து இலங்கை அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், ” ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையிலிருந்து இலங்கை இராணுவத்தை அதிரடியாக நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது ” என ஐ.நா. பொதுச்செயலாளரின் செய்தித் தொடர்பாளர் பர்ஹான்ஹக் தெரிவித்துள்ளார். இதனால் இலங்கை சர்வதேச அளவில் பெரும் பின்னடைவைச் சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.