புதினங்களின் சங்கமம்

நல்லுார் பிரதேசசபை எல்லைக்குள் NPP யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனின் நண்பன் சட்டவிரோத கட்டடம்!!

நல்லுார் பிரதேசசபை எல்லைக்குள் NPP கட்சியின் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனின் நண்பன் என கூறித் திரிபவர், நல்லுார் கிழக்கு இராமலிங்கம் வீதியில் முன்னைய பூங்கனிச்சோலை இருந்த இடத்தில் சட்டவிரோதமான இனந்தெரியாத கட்டம் தொகுதி ஒன்றை அமைத்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

நல்லுார் பிரதேசசபையின் செயலாளரை கைக்குள் போட்டுக் கொண்டு இந்தக் கட்ட தொகுதி அமைக்கப்பட்டு வருகின்றது. வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான வீதியின் நடுப்பகுதியிலிருந்து 10 அடிக்கும் குறைவானதா துாரத்தில் மதில் அமைத்து நிலத்திற்கு சீமெந்தினாலான கட்டுமானங்களும் கூரைபகுதி தகரத்தால் வேயப்பட்டதாகவும் குறித்த கட்டடத் தொகுதி அமைக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக குறித்த பகுதியைச் சேர்ந்த சிலர் நல்லுார் பிரதேசசபை செயலாளரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போத அந்த கட்டம் நாடாளுமன்ற உறுப்பினரின் நண்பனால் சட்டவிரோதமாக கட்டப்பட்டு வருவதாகவும் ஏற்கனவே தவிசாளருடனும் அவர்கள் தொடர்பு கொண்டு சமரசமாகியுள்ளதால் எந்தவித நடடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழைகள் சாதாரன ஒரு ஆட்டுக்கொட்டகையை மதில் சுவருடன் கட்டுவதற்கிடையில் ஓடிச் சென்று தலையை புகுத்தும் நல்லுார் பிரதேசசபை உத்தியோகத்தர்கள் இவ்வாறான பாரிய ஒரு கட்டுமானம் எந்தவித அனுமதியும் இல்லாது கட்டுவதை கைகட்டிப் பார்த்துக் கொண்டு இருப்பது ஏன்?

சட்டவிரோத கட்டடங்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் கூறியது ஏனைய கட்சிக்காரர்களு மட்டுமா? NPP கட்சிக்காரர்களுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளதா? நல்லுார் தவிசாளரும் குறித்த கட்டட ஊழலில் இளங்குமரனுடன் கைகோர்த்து செயற்படுகின்றார் என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளார்கள்.

இதே வேளை  தாங்கள் குறித்த கட்டட முதலாளியிடம் பெருமளவு பணத்தை லஞ்சமாக பெற்று  ஆளுநர் மற்றும் ஏனைய உயர் அதிகாரிகளின் வாயை மூடச் செய்வதற்கு, இளங்குமரனின் நண்பன் என பலருக்கும் தெரியப்படுத்தி நல்லுார் பிரதேசசபை தவிசாளர் மற்றும் செயலாளர் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் திட்டமிட்டு செயற்பட்டார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த இளங்குமரனின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.