புதினங்களின் சங்கமம்

வலையில் சிக்கிய இரண்டு சிறுத்தைகளில் ஒன்று இறந்தது; மற்றொன்றை மீட்க முயற்சி!

புஸ்ஸல்லாவ பகுதியில் உள்ள ஹெல்போடா தோட்டத்தில் வலையில் சிக்கி ஒரு சிறுத்தை, இன்று உயிரிழந்ததுடன், மற்றொரு சிறுத்தையை மீட்கும் முயற்சியில் வன விலங்கு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.

இலங்கையில் பல்வேறு இடங்களில் காட்டு விலங்குகளில் இருந்து தோட்டங்களைப் பாதுகாக்க விரிக்கப்படும் வலைகளில் அண்மைக்காலங்களில் சிறுத்தைகள் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அடுத்தடுத்து பதிவாகி வருகின்றன.

அண்மையில் அரிய வகை கருஞ்சிறுத்தை ஒன்றும் இவ்வாறு வலையில் சிக்கி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.