ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் சிலுவூர் கிராமத்தை சேர்ந்தவர் லோகம் சிவநாகராஜு (வயது 45). இவரது மனைவி பெயர் லட்சுமி மாதுரி. இவர்கள் 2 பேருக்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். லோகம் சிவநாகராஜு பல்லாரி வியாபாரம் செய்து வந்தார்.
மாதுரி தியேட்டரில் வேலை செய்து வந்தார். அப்போது தியேட்டருக்கு சினிமா பார்க்க அடிக்கடி வந்த கோபி என்பவருடன் மாதுரிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
கணவர் இல்லாத நேரங்களில் தனிமையில் சந்தித்து அடிக்கடி இருவரும் உ*ல்லாசம் அனுபவித்து வந்தனர். கோபி டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இதனால் கோபியை மாதுரி தனது கணவர் லோகம் சிவநாகராஜுவிற்கு அறிமுகம் செய்தார். அதோடு லோகம் சிவநாகராஜுக்கும் டிரைவிங் தெரியும் என்பதால், அவரை தனது கம்பெனியில் வேலைக்கு சேர்த்து கொண்டார்.
இதனால் அவர்கள் இருவருக்கும் ரொம்ப வசதியாக போய்விட்டது. கோபியும், மாதுரியும் தங்கள் க*ள்ளக்காதலை தடையின்றி தொடர்ந்தனர்.
ஒருநாள் லோகம் சிவநாகராஜுவுக்கு இருவரின் க*ள்ளக்காதலும் தெரியவந்தது. இதனால் அவர் தனது மனைவியை கண்டித்தார். ஆனாலும் இருவரும் கேட்கவில்லை.
இதனால் இருவரும் கணவர் லோகம் சிவநாகராஜுவை தீ*ர்த்து கட்ட முடிவு செய்தனர். சம்பவத்தன்று இரவில் கணவனுக்கு பிடித்த பிரியாணியை சமைத்த மாதுரி, அதில் தூக்க மாத்திரைகளை பொடியாக்கி கலந்தார். பிரியாணியை ருசித்து சாப்பிட்ட லோகம் சிவநாகராஜு ஆழ்ந்து தூங்கினார்.
இதையடுத்து இரவு 11:30 மணிக்கு க*ள்ளக்காதலன் கோபி வீட்டுக்கு சென்றார். லோகம் சிவநாகராஜுவின் மார்பில் ஏறி கோபி உட்கார மாதுரி தனது கணவரின் முகத்தை தலையணையால் அழுத்தினார். இதில் மூச்சு விட முடியாமல் அவர் இறந்தார்.
லோகம் சிவநாகராஜ் இறந்து விட்டதை உறுதி செய்ததும், கோபி அங்கிருந்து சென்றார். இதையடுத்து கொலையை மறைக்க மாதுரி முடிவு செய்தார். இதனால் எதுவும் நடக்காதது போல் தனது கணவர் லோகம் சிவநாகராஜுவை வீட்டில் படுக்க வைத்தார்.
பிறகு அதிகாலையில் முதல் ஆளாக எழுந்து தனது கணவன் மாரடைப்பால் இறந்ததாக கூறி ஊரை நம்ப வைக்க அவர் திட்டமிட்டார். இதனால் அவர் இரவில் தூங்காமல் இருக்க முடிவு செய்தார். இதற்காக அவர் தனது செல்போனில் ஆபாச படம் பார்த்தார்.
கணவர் இறந்து விட்ட துக்கமோ, அவரை கொன்ற குற்ற உணர்ச்சியோ இன்றி விடியவிடிய அவர் தனது கணவர் லோகம் சிவநாகராஜுவின் உடலின் அருகே இருந்து ஆபாசபடம் பார்த்தார். பிறகு அதிகாலை சுமார் 4 மணியளவில் பக்கத்து வீட்டுக்கு அழுதபடி சென்ற மாதுரி, எனது கணவர் இறந்துவிட்டார். மாரடைப்பால் இறந்துவிட்டார் என்று கூறினார்.
போலீஸ் விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் வெளிவந்தன. தற்போது கள்ளக்காதலர்கள் சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டு வருகின்றனர்.
Home இந்தியச் செய்திகள் கணவனை கொன்று, சடலத்தின் அருகே அமர்ந்து விடியவிடிய கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த லக்ஷ்மி பிடிபட்டது எப்படி?..!




