கிளிநொச்சியில் கள்ள மண் டிப்பரை துரத்தி துரத்தி சுட்ட பொலிசார்!!
கிளிநொச்சியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் மீது பொலிஸார் ஐந்து தடவை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நிலையில் டிப்பர் வாகனம் வீதியில் மணலை கொட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளது. சட்டவிரோத மணல் ஏற்றிய டிப்பர் வாகனத்தை பொலிஸார் வழிமறித்தவேளை குறித்த டிப்பரினை நிறுத்தாது சாரதி பயணித்துள்ளார்.
கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் வீதியூடாக செல்ல முற்பட்ட குறித்த டிப்பர் வாகனத்தை துரத்திச்சென்ற பொலிஸார் ஐந்து தடவைகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.
இந்நிலையில் டிப்பர் வாகனம் வீதியில் மணலை கொட்டியபடி தப்பிச்சென்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

