பிருத்தானியாவில்இ இப்படியான செயற்பாடுகளுக்கு 5 ஆண்டு சிறை!! தமிழ் மொழியில் எச்சரிக்கை!!
பிரிட்டனின் லண்டனில் பறவைகளுக்கு உணவளித்தால், ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என தமிழ் மொழி உட்பட பல மொழிகளில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லண்டனின் கில்பர்ன் (Kilburn) பகுதியில், ப்ரெண்ட் (Brent) நகராட்சியினால் வைக்கப்பட்டுள்ள சில எச்சரிக்கை பலகைகள் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. வீதிகளில் பறவைகளுக்கு உணவளிப்பவர்களுக்கு, ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது எல்லையற்ற அபராதம் விதிக்கப்படும் என அந்த பலகையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
முக்கிய தகவல்கள்:
சர்ச்சைக்குரிய எச்சரிக்கை: கில்பர்ன் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள பாலத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த பலகைகள், பறவைகளுக்கு உணவளிப்பதை ‘எங்கள் வீதிகளுக்கு எதிரான ஒரு குற்றம்’ என வர்ணிக்கின்றன.
குறிப்பாக தமிழ் உட்பட ஐந்து தெற்காசிய மொழிகளில் இந்த எச்சரிக்கைகள் மொழிபெயர்க்கப்பட்டு, ப்ரெண்ட் நகராட்சியின் லட்சினையோடு (Logo) காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரியான மைக்கேல் பிரிட்டன், இந்த நடவடிக்கை மிகவும் கொடூரமானது மற்றும் சட்டவிரோதமானது எனக் குறிப்பிட்டுள்ளார். பாரிய குற்றங்களுக்கு வழங்கப்படும் ஐந்து ஆண்டு சிறை தண்டனையை, பறவைகளுக்கு உணவளிக்கும் செயலுக்கு ஒப்பிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர் சாடியுள்ளார்.
பவுண்டுகள் வரை மட்டுமே அபராதம் விதிக்க முடியும். ஆனால், 5 ஆண்டுகள் சிறை என அறிவிப்பது மக்களை மிரட்டும் செயல் என விமர்சிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஒரு மாணவி, கில்பர்ன் பூங்காவில் புறாக்களுக்கு ஒரு துண்டு ரொட்டியை போட்டதற்காக 100 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். ஒரு மாத கால மளிகைப் பொருட்களுக்கு செலவிடும் இந்த பெரும் தொகையை, முதல்முறை தவறு செய்ததற்காக வசூலிப்பது நியாயமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

