ஆடு ஒன்றை உரப்பையில் போட்டு மோட்டார் சைக்கிளில் சென்ற கில்லாடித் திருடனுக்கு நடந்த கதி!!
மட்டக்களப்பு நகரில் இருந்து ஆயித்தியமலை பிரதேசத்திற்கு ஆடு ஒன்றை உறைப்பையில் கட்டி மோட்டார் சைக்கிள் மிதி பலகையில் வைத்து எடுத்துச் சென்ற ஒருவரை கைது செய்துள்ளதுடன் உயிருடன் ஆட்டை மீட்டுள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்தனர்.
வவுணதீவு வலையிறவு பொலிஸ் சோதனைச் சாவடியில் சம்பவதினமான வியாழக்கிழமை பொலிசார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மட்டு நகர் பகுதியிலிருந்து ஆயித்தியமலை பகுதியை நோக்கி பிரயாணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர் .
இதன் போது மோட்டார்சைக்கிள் மிதிபலகையில் வைத்து கட்டப்பட்டிருந்த உறைப்பையை சோதனை செய்தபோது அதில் 3 வயதுடைய கிடை ஆடு ஒன்று கட்டப்பட்டுள்ளதை கண்டுள்ளனர் இதனையடுத்து குறித்த நபரை கைது செய்ததுடன் உயிருடன் கிடை ஆட்டையும் மோட்டார் சைக்கிளையும் மீட்னர்
மிருகவதை மற்றும் அனுதியின்றி ஆட்டை எடுத்துச் சென்ற இரு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 35 வயதுடையவரின் உறவினரை பொலிஸ் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு அவரை நீதிமன்றில் எதிர்வரும் 4ம் திகதி ஆஜராகுமாறு உத்தரவிட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்..
-மட்டக்களப்பு நிருபர் சரவணன்-

