புதினங்களின் சங்கமம்

இருட்டில் திருவிளையாடல்!! சிக்கினார் யாழ் மாநகர சபை ரெலோ உறுப்பினர்! குளிர் தாங்காது அது மெலிந்துவிட்டது! அதனால் மாமியிடம் தான் சென்றேன் என கூறுவது உண்மையா? வீடியோ

இருட்டோடு இருட்டாக கந்தர்மடம், கந்தபுராண வீதியில் குப்பை வீச வந்த முன்னாள் தமிழரசுக்கட்சி ஆதரவாளர், தற்போதைய சங்கு அணி (டெலோ) மாநகர சபை உறுப்பினர் உதயசிறியை இளைஞர்கள் கையும் களவுமாக பிடித்து விரட்டியடித்தனர்.

May be an image of one or more people, scooter and motorcycleMay be an image of motorcycle, scooter and text that says "BHT6470 NPXQ-6547 NP NPXQ 6547 Dless"May be an image of scooter, motorcycle and text that says "OVE AND MD FEACE pOogP သော်မ NP NPXQ-6547 XQ 6547 Pleas"May be an image of motorcycle, scooter and text

இதே வேளை உதயசிறி  தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட பதிவினை அப்படியே தந்துள்ளோம்… 

தமிழ்த் தேசியத்தின் காவலர்கள் என்று தம்மை சொல்லிக் கொள்பவர்களின் பித்தலாட்டம்
08/12/2025 இன்று விரும்பத்தகாத சம்பவம் ஒன்று நடந்தது சரியான புரிதல் இல்லாமல் என்மீது கொண்ட தனிப்பட்ட காள்ப்புணர்வின் காரணமாக பொய்யான தகவல் ஒண்று சமூகவலைத்தளங்களில் மிக விரைவாக பரப்பப்படுகின்றது.
நான் வீதியில் குப்பை போடும்போது அப்பகுதி மக்கள் என்னைத் துரத்தியடித்ததாக போட்டிருக்கிறார்கள் இது முற்றிலும் ஒரு தவறான தகவல் ஆகும் நடந்த சம்பவம் இதுதான்.
எங்கள் வீட்டில் வளர்க்கப்பட்ட நல்லின நாய் மழைகாரணமாக நாங்கள் குடியிருக்கும் வீட்டு வளவில் வெள்ளம் தேங்கியதால் எனது மாமி வீட்டில் உள்ள கூட்டில் விட்டிருந்தேன் நாய்க்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு சாப்பிடாமல் மெலிந்து இருந்தது அதை மிருகவைத்தியரிடம் கொண்டுசென்று காட்டினேன் அவர் நாயை சோதித்துவிட்டு நாய் குளிருக்குள் கிடந்தபடியால் குளிர் காச்சல் வந்துள்ளது நல்லகாலம் கொண்டுவந்துவிட்டீர்கள் இல்லையெனில் நாய் செத்திருக்கும் என்று கூறி காச்சலுக்கு ஊசியும் போட்டு மருந்தும் தந்து சாக்கு பழைய துணி போட்டு சூடான இடத்தில் படுக்க வையுங்கள் என்று சொன்னார்.
நான் நாயைக் கொண்டுசென்று கூட்டினில் விட்டுவிட்டு அதற்கு போடுவதற்கு எங்கள் வீட்டில் இருந்த பழைய துணிகள் போட்டு கட்டிவைத்திருந்த உரப்பையை எடுத்து மோட்டார் சைக்கிளில் பரமேஸ்வரா சந்தியில் ஒரு அலுவல் இருந்ததால் நான் அம்மன் வீதியால் சென்று கந்தபுராண வீதியில் திரும்பியபோது எனது மோட்டார் சைக்கிளில் இருந்த துணி உரப்பை கீழே விழுந்துவிட்டது அதை எடுக்க நான் குனிந்தபோது திடீரென ஆட்டோவில் வந்த ஒருவர் இதில் குப்பை போடக்கூடாது நாங்கள் மாநகரசபைக்கு காசு குடுத்து குப்பை ஏற்றுகின்றோம் நீர் குப்பையை கொண்டுவந்து போடுகின்றீர் என்று என்னோடு சண்டைக்கு வந்தார்.
நான் அவரிடம் நான் குப்பை போடவில்லை கீழே விழுந்த உரப்பையைத் தான் எடுக்கிறேன் என்று கூறி கிழே விழுந்த உரப்பையை எடுத்து மோட்டார் சைக்கிளில் வைத்துக்கொண்டு மெதுவாகத்தான் பழம் வீதியால் சென்றுகொண்டிருந்தேன் கந்தபுராண வீதியில் என்னோடு முரண்பட்டவர் பின்னால் ஆட்டோவில் கலைத்துக் கொண்டு வந்தவர் மோட்டார் சைக்கிழுக்கு குறுக்கே ஆட்டோவை விட்டுவிட்டு எனது மோட்டார் சைக்கிளின் திறப்பை எடுத்துவிட்டார்.
ஆட்டோவில் வந்தவரை எனக்கு யார் என்றே தெரியாது ஆனால் அவர் கூட மோட்டார் சைக்கிளில் வந்தவரை எனக்கு தெரியும் நான் பேஸ்புக்கில் நியாயம் எழுதுறனிதானே என்று தகாத வார்த்தைகளால் என்னைப் பேசி எனக்கு அடிக்கவந்தார் அத்துடன் எனது மோட்டார் சைக்கிளையும் உதைந்து விழுத்திவிட்டார் நான் சொல்லவந்ததை கேட்கவே இல்லை அதிக மதுபோதையில் நின்றார் அவர் நல்லூர் தொண்டராம்.
நான் நல்லூர் கோயில் ஆலயத் திருவிழா காலத்தில் பாதை அடைத்த பிரச்சனை தொடர்ச்சியாக பரியல் போடுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதுபற்றி பேஸ்புக்கில் எழுதியதால் என்னைப் பழிவாங்கவேண்டும் என்ற நோக்கில் பின்னால் என்னை கலைத்துக்கொண்டுவந்து என்னை மறித்து வீடியோ போட்டோ எல்லாம் எடுத்தார்கள் இவர்கள் இருவரும் என்னோடு முரன்பட்டபோது வீதியில் நிண்றவர்களும் குமிந்து அவர்களும் தங்கள் பங்கிற்கு வீடியோ எடுத்தார்கள் இறுதியாக எனது மோட்டார் சைக்கிள் திறப்பை தந்தார்கள்.
அதில் நியாயம் கதைத்த ஒருவர்கூட எனது உரப்பையில் என்ன இருக்கிறது என்று திறந்து பார்க்கவும் இல்லை என்ன சம்பவம் என்று என்னை கேட்கவும் இல்லை
நான் வீட்டுக்கு சென்று எனது முகப்புத்தகத்தைப் பார்த்தபோது என்னைப்பற்றிய செய்தியை பார்க்கக்கூடியதாக இருந்தது அவர் மான் கட்சியை சேர்ந்த தன்னை கடும் தமிழ்த் தேசியவாதியாக காட்டிக்கொள்ளும் ஒரு முக்கியமானவர் அவரும் அந்த தொண்டர் குழாமில் ஒருவர்.
இதில் என்ன கொடுமை என்றால் இந்த செய்தியை தாங்கள் ஒரு சுயாதீன ஊடகவியலாளர்கள் நடுநிலையாளர்கள் என்று பீத்திக் கொள்பவர்கள் என்னிடம் செய்திதொடர்பாக எதுவித விளக்கமும் கேட்காமல் இந்த பொய்யான செய்தியை தங்கள் முகப் புத்தகத்தில் போட்டுள்ளார்கள்.
எந்தவித நியாயமும் இல்லாமல் தனிப்பட்டவர்களை சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றது இந்த செய்தியை பரப்புவதால் ஆகப்போவது ஒண்றுமில்லை ஒரு விடயத்தை இவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்
1) நான் குடியிருக்கும் வீடு பெரிய வளவை உடையது வீட்டுக்கு பின்புறம் போதுமான இடம் உள்ளது நான் ஏன் குப்பையை வீதியில் வீசவேண்டும்
2) நான் ஒரு மாநகரசபை உறுப்பினர் என்வீட்டு குப்பையைக்கூட மாநகரசபையால் எடுப்பிக்க முடியாது என்றால் எனது வட்டாரத்தில் எவ்வாறு பொதுமக்களின் திண்மக் களிவுகளை அகற்றுவதற்கு உதவமுடியும்
3) அதிகமாக குப்பை சேர்ந்தால் யாழ் மாநகரசபையூடாக கட்டணக் களிவகற்றல் மூலம் களிவுகளை என்னால் அகற்றமுடியாதா?
ஒண்றைமட்டும் நான் உங்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன்
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
நான் கொண்டுசென்ற உரப்பை இதுதான் நீங்களே பார்த்துவிட்டு ஒரு முடிவுக்கு வாருங்கள்
மு. உதயசிறி
யாழ் மாநகரசபை உறுப்பினர்
May be an image of dog

சம்பவத்தை நேரில் பார்த்த பெண் ஊடகவியலாளர் சுமித்தியின் பதிவு இது

பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும்… மாட்டினா பிறகு…. நான் மாட்டேல்ல என்னை மாட்ட வைச்சவங்க என்று மற்றவங்க மீது பழி போட கூடாது….

தப்பு செய்வது இயல்பு… அந்த தப்ப திருத்த பார்க்க வேண்டுமே தவிர.. நான் பரிசுத்தமானவன் என்று மற்றவர்களை கேனையன் என்றும் பதிவுகள் போட கூடாது…

பழைய பிய்ந்த உரைபாக்கில் பழைய துணிகள் இருந்தன… ஒரு இடத்தில் போட முற்பட்ட போது, அங்கு மாட்டிக்கொண்டவரை, அங்கிருந்து அந்த உரை பாக் கை எடுத்துக் கொண்டு போக சொல்லி சொன்ன பின்னர், அந்த பகுதி இளைஞர்கள் பின்தொடர்ந்தது வந்து, பழம் வீதியில் வீச முற்பட்ட போது, ஆட்டோவுடன் மோத எத்தணித்துள்ளார். அப்போது தான் நடு வீதியில் மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு,, தகராறு இடம்பெற்றது.

“அந்த இடத்தில் போட வேண்டாம் என்று சொன்னீர்கள் நான் எடுத்துக் கொண்டு வந்துவிட்டேன் என்று சொன்னவர்.. நான் எல்லாவற்றையும் அவதானித்தேன்… வீடியோ எடுத்தேன்…

எல்லாரும் வீதியில் குப்பை வீசுகிறார்கள் தான்… ஆனால்,,, பம்பர்ஸ் மலத்துடன் வீசுகிறார்கள்… வீட்டில் நாறிப்போன உணவுகளை வீசுகிறார்கள்… விலங்குகள் இறந்தால் அதை வீதியில் வீசுகிறார்கள்…

பொறுப்பானவர்கள். மற்றவர்களை இலகுவில் விமர்சிப்பவர்கள் நீங்கள் ஜாக்கிரதையாக செயற்பட்டிருக்க வேண்டும்… மாட்டிக்கொண்ட பின்,, மீசையில் மண் ஒட்டவில்லை என்று,, கதைகளை புனைய கூடாது…..