புதினங்களின் சங்கமம்

காணாமப் போன முல்லைத்தீவைச் சேர்ந்த சிறுவன் பொலிஸாரால் தாயிடம் ஒப்படைப்பு!!

மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பொலிஸ் பிரிவில் முல்லைத்தீவைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் காயான்மடு கிராமத்தில் வைத்து புதன்கிழமை (10) காலை காணாமல் போன நிலையில் குறித்த சிறுவன் கன்னங்குடாவைச் சேர்ந்த நபர் ஒருவரால் பாதுகாப்பாக கைப்பற்றி வவுணதீவு பொலிஸாரிடம் ஒப்படைத்து அச்சிறுவன் பொலிஸார் ஊடாக தாயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வவுணதீவு
பொலிஸ்நிலைய பதில் பொறுப்பதிகாரி ஜீ.எஸ். பிரியங்கர தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இருந்து மட்டக்களப்பு
பருத்திச்சேனை, காயான்மடுவிலுள்ள தமது உறவினர் வீட்டுக்கு குறித்த ஏழு வயது (07) சிறுவனும் தாயாருடன் வருகை தந்துள்ளனர்.
சம்பவதினமான புதன்கிழம காலை காயான்மடு உறவினர் வீட்டுக்கு பக்கத்திலுள்ள ஆலயம் ஒன்றுக்கு சிறுவனையும் அழைத்துக்கொண்டு தாயார் சென்றுள்ளார்.
ஆலயத்தில் நின்ற சிறுவன் காயான்மடு வீட்டுக்கு தனிமையில் சென்றே போது பாதையை மாற்றி கன்னங்குடா பக்கமாக குறிஞ்சாமுனை சந்திவரை சென்ற போது கன்னங்குடாவைச் சேர்ந்த பிரதீபன் எனும் நபர் ஒருவர் சிறுவனை விசாரித்தே போது சிறுவனால் எதுவும் கூறமுடியாதா நிலையில் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
குறித்த சிறுவனை பொலிஸ்நிலைய பதில் பொறுப்பதிகாரி ஜீ.எஸ். பிரியங்கர தலைமையில் குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்ட நீண்டே நேர விசாரணையின்போது தான் படிக்கும் முல்லைத்தீவிலுள்ள பாடசாலையை கூறியதால் அதன்மூலம் முல்லைத்தீவிலிருந்து வவுணதீவுக்கு வந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு குறித்த சிறுவனை புதன்கிழமை (10) மாலை பொலிஸ்நிலையத்தில் வைத்து தாயிடம் யிடம் ஒப்படைத்தனர்.