புதினங்களின் சங்கமம்

பாலியல் லஞ்சம்!! ஊழல்!! பிரதேசசெயலாளர்கள், அரச அதிபர்கள் உட்பட்டவளுக்கு நடக்கப் போவது என்ன?

வேட்பாளராக நியமிக்கப்பட தன்னிடம் அரசியல் கட்சியொன்று பாலியல் இலஞ்சம் கோரியதாக
2017இல் போராட்டம் நடத்திய பெண்

இலங்கை அரச நிர்வாகசேவையிலுள்ள 70 உயரதிகாரிகள் மோசடி, பாலியல் துஷ்பிரயோகம்
உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களிா் சிக்கியது தொடர்பான அறிக்கை பொதுநிர்வாக,
உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அரச அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளடங்கிய பல உயரதிகாரிகள் இந்த பட்டியலில்
உள்ளடங்கியுள்ளனர்.

ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த அதிகாரிகளை தற்போதுள்ள
பதவிகளில் இருந்து நீக்குவதற்கும் அவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கும்
உள்நாட்டலுவல்கள் அமைச்சு பரிந்துரை செய்யவுள்ளது.

அதிகாரிகள் மீதான விசாரணைகளுக்கு உள்நாட்டலுவல்கள், பொதுநிர்வாக அமைச்சர் வஜிர
அபேவர்தன ஒப்புதல் அளித்துள்ளார்.

சில அதிகாரிகளின் தனிப்பட்ட கோப்புகளில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும்
இணைக்கப்பட்டிருந்தபோதும், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல், அவர்கள்
கடமையில் தொடர அனுமதிக்கப்பட்டிருந்ததும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

விசாரணைப்பட்டியலில் இணைப்படவுள்ள 70 அதிகாரிகளில் குறைந்தது 30 பிரதேச செயலாளர்கள்
உள்ளனர். அவர்களில் சிலர் குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும், உத்தியோகபூர்வ
கடமைகளைச் செய்ய பெண்களிடமிருந்து பாலியல் இலஞ்சம் கோருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

மோசடியான முறையில் மணல் சுரங்க அனுமதிகளை தயாரித்ததாக மாவட்ட செயலர் ஒருவர் குற்றம்
சாட்டப்பட்டுள்ளார். மணல் சுரங்க அனுமதிகளை விற்றமை, மோசடியான முறையில் வேறு
அனுமதிகளை செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களையும் அவர் எதிர்கொள்கிறார்.

மோசடி முறையில் பலவிதமான அனுமதிகளை வழங்கியதாகவே மற்ற அதிகாரிகள் மீது
குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

சில அதிகாரிகளை கடினமான பிரதேசங்களிற்கு மாற்றுவதன் மூலம் தனிப்பட்ட காரணங்களுக்காக
பழிவாங்குவதாக மூத்த அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அனுராதபுரம், பதுளை, இரத்தனபுரி, பொலன்னறுவை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அதிக
முறைப்பாடுகள் வந்துள்ளன.

கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் 70 அதிகாரிகள் தொடர்பான விசாரணை பட்டியல்
தயாரிக்கப்பட்டு, உள்ளக விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.