புதினங்களின் சங்கமம்

யாழில் பக்கத்து உறவினர் வீட்டுக்குச் சென்று தூக்கில் தொங்கி பலியான சண்முகவடிவேல்!!

யாழில் தவறான முடிவெடுத்து குடும்பஸ்தர் ஒருவர் இன்றைய தினம் (10) உயிர்மாய்த்துள்ளார். குமார சுவாமி வீதி, புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சதாசிவம் சண்முகவடிவேல் (வயது 55) என்பவரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், அவர் இன்றைய தினம் அவரது வீட்டுக்கு அருகேயுள்ள உறவினர் வீட்டில் சுருக்கிட்டு தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சாட்சிகளை அச்சுவேலி பொலிஸார் நெறிப்படுத்தினர்.