புதினங்களின் சங்கமம்

புத்தளத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியான காட்சிகள்!! வீடியோ

வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று (31) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களை இலக்கு வைத்து, காரில் பிரவேசித்த இனந்தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காரில் பிரவேசித்தவர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களை காரில் மோதி விபத்துக்குள்ளாக்கியுள்ளனர்.

அதன்பின்னர், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்ளை கூறிய ஆயுதத்தினால் அவர்கள் தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து காயமடைந்தவர்களில் ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக குறிப்பிடப்படுகிறது

மற்றைய நபர் மீது காரில் பிரவேசித்த இனந்தெரியாதவர்களால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் ஸ்த்தலத்திலேயே பலியானார்.

உயிரிழந்தவர் மேல்நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றிற்காக வழங்கப்பட்ட உத்தரவின் பேரில், வென்னப்புவ பொலிஸில் முன்னிலையாகி கையொப்பமிட சென்றவர் என்று தெரியவந்துள்ளது.

கையொப்பமிட்டதன் பின்னர், அவரும் மற்றுமொருவரும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய போதே, குறித்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ரிவோல்வர் ரக துப்பாக்கியில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் வழக்கு தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி அறிவிக்கப்படவிருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

 


May be an image of 1 person and pool

May be an image of 2 peopleMay be an image of 1 person and motorcycleMay be an image of 1 person and timber yardMay be an image of 2 people
May be an image of 1 personMay be an image of 2 people, skateboard and scooter