புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் நீர்பாசன ஊழியர்கள் ஊடகங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்ம்!! எதற்காக?

நாம் ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது. அந்த செய்திக்கு எதிராக கிளிநொச்சி நீர்பாசண திணைக்களத்தின் ஒரு பிரிவு ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனராம். அந்த செய்தியும் இணைக்கப்பட்டுள்ளது. ந

நாம் வெளியிட்ட செய்தி இணைப்பில் நீர்ப்பாசன பொறியியலாளர் ரிசி சம்பளத்தை வெட்டியது தொடர்பாக தெரிவித்திருந்தோம். ஆனால் பொறியியலாளர் ரிசி தனது கடமையையே செய்தார் எனவும் ஊழியர் கிருபைராஜா பல தடவைகள் வேலைக்கு வராது லீவும் கொடுக்காது இருந்துள்ளார் எனவும் அவரது அரச லீவுகள் அனைத்தும் முடிவடைந்த பின்னரும் அவர் வேலைக்கு சமூகமளிக்காது இருந்ததால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில இஞ்சினியர் ரிசி இருந்ததாகவும் குறித்த அலுவலகத்தைச் சேர்ந்த சிலர் எமக்கு தெரிவித்துள்ளார்கள். அதனாலேயே கிருபைராஜாவுக்கு சம்பளத்தில் 10 ஆயிரம் ரூபா கழிக்கும் நிலை உருவாகியிருந்தது.

நாம் வெளியிட்ட செய்தியால் பொறியியலாளர் ரிசி கடும் மன உழைச்சலுக்கு ஆளாகினார் எனவும் அவரது அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள். இந் நிலையிலேயே குறித்த அலுவலகத்தைச் சேர்ந்தவர்களால் ஆர்ப்பாட்டம் கவனயீர்ப்பு ஒன்று இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி மேற்கு நீர்ப்பாசன உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று 07.04.2025 ஈடுபட்டனர்.கிளிநொச்சி மேற்கு பிரிவு நீர்ப்பாசன திணைக்களத்தில் பணியாற்றிய உத்தியோகத்தர் ஒருவர் கடந்த 03ம் திகதி யாழ்ப்பாணத்தில் தற்கொலை செய்து கொண்டார்.அவருடைய உயிரிழப்புக்கு குறித்த பிரிவின் பொறியியலாளர்தான் காரணம் என தெரிவித்து சில சமூக வலைத்தளங்களிலும் இணையத்தளங்களிலும் செய்திகள் வெளிவந்தன.குறித்த செய்தி உண்மைக்குப் புறம்பானது எனவும், திணைக்களத்தை அவமதிக்கும் செயல் என தெரிவித்து உத்தியோகத்தர்கள் நுழைவாயிலை மூடி கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

May be an image of 8 people and textMay be an image of 12 people, dais and text

May be an image of 9 people and text

கிளிநொச்சி நீர்பாசன பொறியிலாளர் ரிஷியால் கொலை செய்யப்பட்டாரா அப்பாவி அரச ஊழியர் கிருபைராஜா?