புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சி நீர்பாசன பொறியிலாளர் ரிஷியால் கொலை செய்யப்பட்டாரா அப்பாவி அரச ஊழியர் கிருபைராஜா?

அரசாங்கத்தில் மாதம் 40 ஆயிரம் சம்பளத்தைப் பெறும் சாதாரண ஒரு தொழிலாளி கிருபைராஜா. சில ஆண்டுகளுக்கு முன் கிருபைராஜாவின் மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 3 பெண் பிள்ளைகள் பிறந்திருந்தன. கிருபைராஜா இந்த குழந்தைகளை மிகச் சிரமப்பட்டே 40 ஆயிரம் சம்பளத்தில் வளர்த்து வந்தார். யாழ் பண்ணைப் பகுதியில் உள்ள நீர்ப்பாசனத திணைக்களத்தில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்த கிருபைராஜாவை கிளிநொச்சி நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு மாற்றியுள்ளார்கள் மனச்சாட்சி இல்லாத உயரதிகாரிகள்.

இதனால் கிருபைராஜா அதிர்ச்சியுற்றிருந்தார். உயரதிகாரிகள் பலரிடம் தனது குடும்பச் சூழ்நிலையை கூறி அதனைக் கருத்தில் எடுத்து கிளிநொச்சி இடமாற்றத்தை இரத்துச் செய்ய மன்றாடினார். ஆனாலும் அவரது மன்றாட்டம் உயரதிகாரிகளிடம் எடுபடவில்லை. இந் நிலையில் ஏதும் செய்ய முடியாத நிலையில் கிளிநொச்சிக்கு ஒவ்வொரு நாளும் சென்று வந்துள்ளார் கிருபைராஜா. யாழ்ப்பாணத்திலிருந்த கிளிநொச்சி சென்று வருவதற்கு பஸ் செலவே நாள் ஒன்றிற்கு ஆயிரம் ரூபா. இவ்வாறான நிலையில் கிருபைராஜா சென்று வந்த போதும் தனது பிள்ளைகளின் சுகவீனம் மற்றும் அவர்களின் பாடசாலை கற்றல் நடவடிக்கை போன்ற செயற்பாடுகளுக்காக பல தடவைகள் லீவு எடுத்ததாகத் தெரியவருகின்றது. குறித்த லீவுகளுக்கு முறைப்படி முன்னரே உயரதிகாரிகளின் அனுமதி பெறப்படவில்லை என காரணம் காட்டி அவரது சம்பளத்திலிருந்து 10 ஆயிரம் ரூபாவை வெட்டியெடுத்துள்ளார் கிளிநொச்சி நீர்ப்பாசணப் பொறியியலாளர் ரிஷி. இதற்கு குறித்த நீர்ப்பாசண திணைக்கள உயரதிகாரியும் ஒப்புதல் வழங்கியதாக தெரியவருகின்றது. இதனால் அதிர்ச்சியடைந்து கடும் விரக்தியுடன் வீடு திரும்பிய கிருபைராஜா தனது 3 பெண் குழந்தைகள், மனைவி ஆகியோவை அநாதையாக விட்டுவிட்டு உயிரை மாய்த்தார். கிருபைராஜாவின் செத்தவீட்டுக்கு ரிஷி மற்றும் நீர்ப்பாசணத் திணைக்கள உயரதிகாரிகள், ஊழியர்கள் வந்து கலந்து கொண்டிருந்தார்கள்.

மரண விசாரணை அதிகாரிக்கு மனைவி தனது குடும்ப கஸ்டங்களைக் கூறி அழ முடியுமா? அல்லது சம்பளக் கழிவு தொடர்பான விபரங்களை மனைவியிடம் கூறாது கிருபைராஜா தனக்குத் தானே நெஞ்சில் பூட்டி வைத்திருந்து விரக்தியுற்றிருந்தது மனைவிக்கு தெரிந்திருக்குமா? அவருக்கு ஆஸ்மா என்ற நோய் உள்ளது மட்டும் மனைவிக்கு வெளிப்படையாகத் தெரிந்திருந்தது. அதனாலோ என்னவோ கணவர் தற்கொலை செய்திருக்கலாம் என மனைவி எண்ணியிருப்பார்… அல்லது கணவனின் துயரத்தையும் கஸ்டத்தையும் மரணவிசாரணை அதிகாரியிடம் கூறாது இருந்திருப்பார். இதன் காரணமாக கிருபைராஜா ஆஸ்மாவின் கொடுமையால் தற்கொலை செய்ததாக கூறி அவரது கதை முடிக்கப்பட்டுள்ளது. பல காலமாக ஆஸ்மா நோய் இருந்தவர் சம்பளம் கழித்தபின் தற்கொலை செய்தார் என்றால் அதற்கு என்ன காரணம் என்று சம்மந்தப்பட்டவர்களுக்குத்தான் புரியும்.

கிளிநொச்சி நீர்ப்பாசண பொறியியலாளர் ரிஷி உட்பட அரச உயரதிகாரிகளில் பெருமளவானவர்கள் அரசாங்கத்தால் தமக்கு வழக்கப்படும் அனைத்துச் சலுகைகளையும் மிக உச்சமாகப் பெற்றுக் கொண்டு ஊழல், நிர்வாகத்துஷ்பிரயோகங்களையும் செய்து கொண்டு மிகவும் வக்கிரபுத்தியுடன் அப்பாவி ஊழியர்களை இவ்வாறு பந்தாடிப் பழிவாங்குவது நியாயமானதா?

இவர்தான் ரிஷி இஞ்சினியர்