யாழில் கடை ஒன்றை படையினர், அங்கஜன் அணி ஆவா குழு காவாலிகள் அடித்து நொருக்கிய காட்சிகள் இதோ!!
யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் அங்குள்ள பொருள்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது. தப்பிச் செல்லும் போது வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றையும் அடித்துச் சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளது.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை முருகமூர்த்தி வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
“2 மோட்டார் சைக்கிள்களில் 5 பேர் கொண்ட கும்பல் வந்துள்ளது. முழுமையாக தலைக்கவசம் அணிந்திருந்த அவர்கள் கடைக்குள் புகுந்து பொருள்களை அடித்துச் சேதப்படுத்தியுள்ளனர்.
அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள்களுக்கு இலக்கத்தகடுகள் இல்லை. வர்த்தக நிலையத்திலிருந்து புறப்பட்ட கும்பல், அந்த வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியின் கண்ணாடி மற்றும் உதிரிப்பாகங்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த காவாலிகள் அங்கஜன் அணியுடன் சேர்ந்து இயங்குபவர்கள் எனவும் ஆவா குழு என்ற போர்வையில் படையினரால் இயக்கப்பட்டவர்கள் தற்போது கோத்தாவின் பணிப்பின் பேரில் அங்கஜனுடன் இணைந்து செயற்படுகின்றனர் எனவும் மருதனார்மடத்தில் பிடிபட்ட காவாலிகள் படையினரால் பிடிக்கப்பட்டது போல் காட்டி அவர்கள் குற்றம் செய்யாத நல்லவர்கள் என ஊருக்கு காட்டுவதற்காக அங்கஜன் மற்றும் படைத்தரப்பினர் மக்கள் தலையில் மிளகாய் அரைத்துள்ளனர் எனவும் சமூகவலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. குறித்த காவாலிகள் எவ்வாறு பட்டப்பகலில் படையினரின் கண்களுக்கு தெரியாது தப்பிச் செல்கின்றனர் எனவும் நிச்சயம் இவர்கள் படையினரின் அனுசரனையுடன் தொழிற்படுகின்றார்கள் என சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன.
யாழ்ப்பாணத்தில் தெருவுக்கு தெரு சோதனைச்சாவடிகளை போட்டு மக்களை இறக்கி ஏற்றுவதற்காக படையினர் தாமே இவ்வாறான காவாலிகளை வீதியில் திரியவிட்டுள்ளதாகவும் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளது.





