யாழில் மூத்த ஊடகவியலாளர் பாரதியைக் கொலை செய்தது டான் ரீவி முதலாளி குகநாதனா? அதிர்ச்சித் தகவல்கள்!
நேற்று காலமாகிய சிரேஸ்ட ஊடகவியலாளர் பாரதி இராஜ நாயகத்தை ஏமாற்றிய தொலைக்காட்சி முதலாளி
யாழ்ப்பாணத்தில் இயங்கும் டான் தொலைக்காட்சியின் இலங்கைத் தமிழ் பூர்வீகம் கொண்ட ஐரோப்பிய முதலாளியான குகநாதன் நேற்று காலமாகிய சிரேஸ்ட ஊடகவியலாளர் பாரதி இராஜ நாயகத்தை எப்படி ஏமாற்றினார் ?
சில வருடங்களுக்கு முன்னர் வரை, சிரேஸ்ட ஊடகவியலாளர் இ.பாரதி அவர்கள் தனது நோய்களுக்கான போதிய மருத்துவ வசதிகளுடன் கொழும்பில் வாழ்ந்தவர். அவர் அங்கு பத்திரிகை ஊடகத்துறையில் போதிய சம்பளத்துடன் நிம்மதியாக வேலை செய்தவர்.
யாழ்ப்பாணத்தில் முரசொலி, ஈழமுரசு முதலிய பத்திரிகைகளில் யாழ்ப்பாணத்தில் 1980 களின் முற்பகுதியிலும் நடு ப் பகுதி யிலும் பணியாற்றிய பாரதி, பின்னர் கொழும்புக்கு இடம்பெயர்ந்தார்.
ஏன் இடம்பெயர்ந்தார் ?
பாரதியின் இளைய சகோதரன் இ.பரதன் அக்காலத்தில் யாழ் பல்கலைக்கழகத்திற்கு BSc( Physical Science) கற்கை நெறிக்கு தெரிவாகியிருந்தார். ஆயினும் பரதன் பல்கலைக்கழகம் செல்லாமல் அல்லது சிறிது காலம் கற்றுவிட்டு விலகி அக்காலத்தில் புலிகளின்
யாழ்.மாவட்ட த் தளபதி யாக இருந்த கிட்டுவின் தொடர்புகள் காரணமாக இயக்கத்தில் இணைந்தார்.
பரதன் வீடியோ படப்பிடிப்பு, ஒளிப்படக்கலை ஆகியவற்றில் மிகை ஆர்வம் உள்ளவர். 1970 களின் பிற்பகுதியிலும் 1980 களின் முற்பகுதியிலும் யாழ்ப்பாணத்தில் பிரபலமாக இயங்கிய பேபி ஸ்ரூடியோவில் சிரேஸ்ட கமராக்காரர்களாக இருந்தவர்களுக்கே சின்னப் பொடியனாக இருந்த பரதன் வீடியோக்கலை, ஒளிப்படக் கலை முதலியவற்றின் நுணுக்கங்களை சொல்லி க் கொடுத்தவர்.
இயக்கத்தில் பரதன் இணைந்த பின்னர் புலிகளின் தளபதி கிட்டு, புலிகளின் ஒரு தொலைக்காட்சி சேவையை ஆரம்பிக்க விரும்புகிறார். அந்த ஆர்வம் இ.பரதனிடமும் ஏற்கனவே இருந்தது. இருவரது மனவிருப்ப ங்களும் ஒன்று சேர, நிதர்சனம் எனும் தொலைக்காட்சி சேவையை 1985 இல் ஆரம்பிக்கிறார்கள்.
ஆயினும் 1987 இல் இந்திய இராணுவம் இலங்கையில் கால் பதித்து….புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும்
சண்டை ஆரம்பித்தவுடன் இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்தின் ஊடகங்களைத் தாக்கியழித்துவிட்டு….தான் கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கும் என நினைத்து உதயன் பத்திரிகையை மட்டும் எஞ்சவிட்டது.
புலிகள் வன்னிக் காட்டுக்குள் நகர்ன்திருந்து கொண்டு, யாழ்ப்பாணத்தில் கெரில்லா இராணுவ உத்தியைப் பயன்படுத்தினர். விரல் விட்டு எண்ணத் தக்க போராளிகளையும் ஆயுதங்களையும் வைத்துக்கொண்டு இந்திய இராணுவத்தின் மீது கரந்தடித் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்தனர். அவ்வேளையில் இயக்கத்தின் தொலைக் காட்சி சேவைப் பொறுப்பாளர் இ.பரதனை இந்திய இராணுவம் தேடித்திரிந்தது. பரதன் எங்கோ தலைமறைவாகி விட்டார். ஆனால் இந்திய சிப்பாய்கள் பரதனின் சகோதரன் பாரதிக்கும் தாய், தகப்பனுக்கும் ஆக்கினைகள் கொடுக்கத் தொடங்கியது….
அதனால் பாரதியும், பெற்றோரும் கொழும்புக்கு இடம்பெயர்ந்தனர். பின்னர் புலிகள் இலங்கையை இந்தியா விடமிருந்து பாதுகாக்கும் நோக்குடனும் தமது இருப்பை தக்கவைக்கவும் சுன்னாகத்தைச் சேர்ந்த மாணிக்கசோதி மாஸ்ரரை அப்போதய ஜனாதிபதி பிரேமதாசாவிடம் சமாதானத் தூதுவராக அனுப்பினர். மாணிக்கசோதி மாஸ்ரர் மிகுந்த இராஜதந்திரி….அவர் வன்னியில் பிரபாகரனின் கடிதத்தை வாங்கிக் கொண்டு பிரேமதாசாவிடம் சென்று புலிகள்- பிரேமா பேச்சுவார்த்தைகளை ஒழுங்கு செய்து….அதன் மூலம் பிரேமதாசா இந்திய இராணவத்தை இலங்கையிலிருந்து வெளியேற்றும் வேலையை கனகச்சிதமாகச் செய்து முடித்தார்.
இலங்கையை இந்திய ஆக்க்கிரப்பிலிருந்து காப்பாற்றிய பெருமை பிரபாகரன், பிரேமதாசா, மாணிக்கசோதி மாஸ்ரர் ஆகியோரையே சாரும்.
1990 இல் இந்திய இராணுவம் வெளியேறியதும் வடக்கு-கிழக்கு மாகாணத்தில் அம்பாறை நகரம், மட்டக்களப்பு நகரம், திருமலை நகரம், வவுனியா நகரம் மற்றும் இவற்றுக்கான சில பிரதான வீதிகள் தவிர மிகுதி தமிழர் பிரதேச நகரங்கள், கிராமங்கள் 90% நிலமும் கடலும் புலிகளின் நேரடி இராணுவக்கட்டுப்பாட்டுக்குள் வந்தன.
பொலிஸ் துறை, நிர்வாகத்துறை, பொருண்மியத்துறை நிதித்துறை, நீதித்துறை,
கல்வித்துறை, சுகாதாரத்துறை, விவசாயத்துறை முதலிய பிரதான கட்டமைப்புக்களை ஆரம்பித்து பலப்படுத்தினர். அத்துடன் புலிகளின் இராணுவக் கட்டமைப்புக்கள் புலனாய்வுத்துறை, தரைப்படை, கடற்படை, விமானப்படை முதலியனவாக ஓங்கி வளர்ந்தது….
புலிகள் தமது வானொலி சேவை, தொலைக்காட்சி சேவை ஆகியவற்றை மீண்டும் ஆரம்பித்தனர். பரதன் பொறுப்பாளராக செயற்பட்டார். போர் உக்கிரமாக நடந்தது.
இவ்வாறான இக்கட்டான காலப்பகுதியில் கூட பரதனின் சகோதரர் பாரதி கொழும்பில் தான் ஊடகவியலாளராகப் பணியாற்றினார். ஆயினும் பரதனுடன் தனது தொடர்புகளை முற்றாகத் தவிர்த்து கொழும்பு அரசாங்கக் கட்டுப்பாட்டுக்குள் தன்னை தகவமைத்துக் கொண்டார்.
பாரதி கொழும்பில் எல்லோராலும் மதிக்கப்படும் நேர்மையான ஒரு ஊடகவியலாளனாகப் பணியாற்றினார். பல சர்வதேச ஊடக நிறுவனங்களின் விருதுகளைப் பெற்ற ஒரு தலை சிறந்த ஊடகவியலாளன் பாரதி…
பத்திரிகைகளின் ஆசிரியர் பீடங்களில் உதவி ஆசிரியர் பதவி தொடக்கம் பிரதம ஆசிரியர் பதவிவரை பொறுப்புக்களைச் சுமந்து இரவு பகலாகப் பணியாற்றியவர். மிகவும் தன்னடக்கமும் அமைதியும் மிக்கவர். நிறைகுடம் தளம்பாதல்லவா?
அவ்வாறு கொழும்பில் நிம்மதியாக வாழ்ந்த பாரதியின் வாழ்வில் 2017 இல் நாசம் விளைந்தது….யாழ்ப்பாணத்தில் டான் தொலைக்காட்சி சேவையை நடத்தி க் கொண்டிருந்த டான் முதலாளி குகநாதன் தான் ஒரு பத்திரிகையை ஆரம்பிக்கப் போவதாகவும் அதற்கு பிரதம ஆசிரியராக பாரதியை நியமிப்பதாகவும் ஆசை காட்டினார். கொழும்பில் பாரதி வேலை செய்த பத்தி ரி கை களிலிருந்து விலகுமாறு பாரதியை பக்க ப் படுத்தினார். ஆனால் பாரதி தனது நோய் நிலைமைகள் காரணமாகவும் கொழும்பில் போதிய சிகிச்சை வசதிகள் கிடைப்பதையும் சுட்டிக்காட்டி மறுத்தார். ஆயினும் அந்த முதலாளி ஆசை காட்டி மோசம் செய்தார். இறுதியில் அந்த ஐரோப்பிய முதலாளியின் ஆசை வார்த்தைகளுக்கு பாரதி பலியாகிப்போனார். கொழும்பு பத்திரிகைப் பணியிலிருந்து இராஜினாமாச் செய்த்துவிட்டு யாழ்ப்பாணம் வந்த பாரதி திகைத்துப் போனார். தொலைக் காட்சி முதலாளி ஆரம்பித்த பத்திரிகையின் அலுவலகத்தில் பாரதிக்கு ஒழுங்கான மேசை கதிரை கூட இருக்கவில்லை….
செய்திப் பத்திரிகைபற்றி எவ்வித அடிப்படை அறிவும் அற்ற, தமிழைக்கூட சரியாக எழுதத் தெரியாத ஒரு ஆளணியினரே அந்த முதலாளியால் வழங்கப்பட்டது……பாரதி மிகவும் கவலையடைந்தார். ஆயினும் அவரது சுபாவம் அமைதியாக தனது பணியை தொடர்வதாகவே இருந்தது. ஆயினும் காலம் போகப் போக அறிவற்ற ஆளணியின் தவறுகளும் பிழைகளும் , அந்த தொலைக்காட்சி “முதலையால்” (முதலாளியால்) பிரதம ஆசிரியர் பாரதி மீது போடப்பட்டன. பாரதியைப் பார்த்து ” உமக்கு பத்திரிகைத் துறையில் ஒரு மயிரும் தெரியாது” என்று மரியாதையின்றி வைது தள்ளும் நிலைக்கு அந்த தொலைக்காட்சி முதலை வந்தார். ” நீர் இனி வேலைக்கு வரவேண்டாம் ” என்று சொல்லிவிட்டார் முதலாளி. பாரதி நிர்க்கதிக்குள்ளானார். நொந்து நூலாகிப் போனார் பாரதி….அவர் ஆழ்ந்த துயருற்றார்….ஏறத்தாழ 40 வருடங்கள் பத்திரிகை ஊடகத்துறையில் அனுபவம் உள்ள பாரதி, தொழிலற்று அந்த முதலாளியால் நடு வீதிக்கு தூக்கி எறியப்பட்டார். பாரதிக்கு மன அழுத்தமும் கவலைகளும் அதிகரித்தன. நண்பர்கள் ஆறுதல் கூறி பாரதியை தேற்ற முற்பட்டனர். பாரதி மேலும் மேலும் தனது நோய்கள் தீவிரமடையும் நிலைக்கு வந்தார்…..இக்கால கட்டத்தில் லண்டனில் வசித்துவந்த பரதன் அவர்களும் இருதயத் தாக்கு காரணமாக இறந்து போனார். பொருளாதார ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பாரதிக்கு ஆதாரமாக இருந்த பரதன் இறந்து போனமை பாரதி அவர்களை மேலும் கலங்க வைத்தது….அவரது ஆரோக்கியம் மேலும் மேலும் பாதிக்கப்பட்டது….அவர் தனது சிகிச்சைகளை யாழ்ப்பாணத்தில் போதியளவு தரமாகப் பெறமுடியவில்லை…..
அவர் நேற்று எம்மைவிட்டு நிரந்தரமாகப் பிரிந்து விட்டார்.
ஐரோப்பாவில் தனது நலன் களை நிலை நிறுத்தி வைத்துக்கொண்டு யாழ்ப்பாணத்தில் தொலைக்காட்சி சேவையை நடத்தும் அந்த ஊடக முதலாளியின் துரோகம்,
திறமையுள்ள
அனுபவசாலியான ஊடகவியலாளர் பாரதி, கவலைகளால் விரைவில் தீவிரமாக நோய்வாய்ப்படுவதற்கு காரணமாகியது.
பாரதி அண்ணன் உங்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்

