புதினங்களின் சங்கமம்

மூன்று நபர்களின் பொஞ்சாதிமாருக்காக வடக்கின் ஆசிரியர் இடமாற்றம் சீரழிக்கப்பட்டது எப்படி? அதிர்ச்சித் தகவல்கள்!!

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்….

வட மாகாணத்தில் வேட்டியும் நீளக்காச் சட்டை அணியும் இருவர் ஒருவர் முழுமையாக நீளக் காச்சட்டை சேட்டு அணிபவர் இவர்களின் மனைவிமார் யாழ் மாவட்டத்தை விட்டு வெளியில் செல்லக்கூடாது என்பதற்காக ஒட்டுமொத்த ஆசிரியரிய இடமாற்றம் வடக்கில் சீரழிக்கப்பட்டது.
பல இளம் வயது பெண் ஆண் ஆசிரியர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து தமது சொந்த இடமான யாழ் மாவட்டத்திற்கு சுமார் 7 வருடங்களுக்கு மேலாகியும் திரும்ப முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.
முன்னாள் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளராக இருந்த வரதீஸ்வரன் காலத்தில் இடமாற்றத்தை மேற்கொள்ள முற்பட்டபோது இந்த மூவரில் ஒருவர் தடுப்பதற்கு பல முயற்சிகள் எடுத்தார்.
ஆனால் நேர்மையாக அந்த இடமா ற்றத்தை செய்ய வேண்டும் என்பதற்காக குறித்த திகதியில் பணி இடமாற்றம் பெற்ற ஆசிரியர்கள் வெளிமாவட்டங்களில் கடமைகளை பொறுப்பேற்க வேண்டும் என அப்போதைய செயலாளர் வரதீஸ்வரன் எழுத்து மூலத்தில் கடிதம் அனுப்பினார்.
இதைக் கண்டு மூவரில் ஒருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் குறித்த இடமாற்றம் முறைப்படி நடக்கவில்லை எனக் கூறி இடைநிறுத்துமாறு தனது தாலி கட்டிய மனைவிக்காக படாத பாடுபட்டார்.
பல தாலி கட்டிய பெண்கள் வெளி மாவட்டங்களில் படாதபாடு பட்டு வரும் நிலையில் தனது மனைவி யாழ் வலையத்துக்குள்ளே இருக்க வேண்டும் என்பதற்காக ஒட்டுமொத்த இட மாற்றத்தை சீரழித்தார்கள்.
அப்போதைய செயலாளராக இருந்த வரதீஸ்வரன் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு எழுதிய ஒரு கடிதம் அவரின் நேர்மை தன்மையை காட்டுவதாக அமைந்தது.
எனது அதிகாரங்களுக்கு உட்பட்டு உரிய முறையில் பணி இடமாற்றத்தை செய்திருக்கிறேன் குறித்த விடையம் தொடர்வில் நிறுத்துமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு கூற முடியாது என கூறியிருந்தார்.
குறித்த விடயம் தொடர்பில் ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு இணங்க மட்டுமே என்னால் செயல்படுத்த முடியும் என பதில் அனுப்பியிருந்தார்.
சொல்லவா வேண்டும் அப்போதைய ஆளுநர் யார் என்பது உங்களுக்குத் தெரியும் ஒருவாறு குறித்த இடமாற்றத்தை தற்காலிகமாக நிறுத்துமாறு செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
பார்ப்போம் தற்போதைய ஆளுநர் வேதநாயகன் என்ன செய்யப் போகிறார் என்பதை .
ஒருவரின் மனைவி ஓய்வுக்கு சென்று விட்டார் என நினைக்கிறேன் மிகுதி இருவர்
விரைவில் மூவரின் தாலி கட்டிய மனைவிமார்களின் சேவை காலம் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வெளிப்படுத்தப்படும்.