புதினங்களின் சங்கமம்

தமிழரசுக் கட்சிக்கு பிரேதபரிசோதனை செய்யப் போவது யார்? யாழ் போதனா வைத்தியசாலை டொக்டர் கூறுவது என்ன?

யாழ் போதனாவைத்தியசாலை வைத்திய அதிகாரி உதயசீலன் கற்கண்டு அவர்களின் பேஸ்புக் பதிவை அப்படியே இங்கு தந்துள்ளோம்.
தமிழரசுக்கட்சிக்கு முடிவுரை சுத்துமாத்து அவர்களால் வெற்றிகரமாக எழுதப்பட்டுள்ளது. இப்படி நடக்கும் என்று அவர் கட்சிக்குள் வந்த நாளில் இருந்தே பலராலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
வெறுமனே அவரை மட்டுமே குறை சொல்லிவிடமுடியாது. முதுகெலும்பற்ற மூத்த தலைவர்களும், முள்ளந்தண்டற்ற அற்ப ஆசை கொண்ட, பகுத்தறிவு அற்ற மூன்றறிவு இடைநிலை தலைவர்களும் தான்.
படிப்படியாக ஒத்தோடிகள் துணையுடன் தமிழ் தேசிய நீக்க அரசியலை செய்து முற்று முழுதாக கட்சிக்கு மங்களம் பாடியிருக்கிறார்.
மா.சே, சீ.வீ.கே, குல நா. போன்ற தலைவர்கள் தங்களுக்குள் அறுவான்,துலைவான், விசரன் என்று சுத்துமாத்தை திட்டினாலும் அவர் முன்னிலையில் பம்முவதற்கு என்ன காரணங்களாக இருக்க முடியும்?
பேசுவதற்கு தைரியம், திராணி இல்லாமல் இருக்க வேண்டும் இல்லை ஏதோ ஒரு குற்றப்பின்னணி சார்ந்த விடயம் ஒன்றில் சுத்துமாத்திடம் உதவி பெற்றிருக்கலாம் அல்லது சிக்கியிருக்கலாம்.
இந்த மூவரை விட நீண்ட காலமாக தமிழரசுக்கட்சியில் இருந்தோர் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். மத்திய குழுவிலும் தெரிவுக் குழுவிலும் இருப்பவர்கள் 2010க்கு பிறகு வந்தவர்களும் மாற்றுக்கட்சி, ஒட்டுக்குழுக்களில் இருந்து வந்தவர்களுமே.
தெரிவுக்குழுவில் இருந்து சிரேஸ்ட சட்டத்தரணி திரு. தவராசா சுத்துமாத்தினால் நீக்கப்பட்டிருக்கிறார். அதற்கு மூன்று மூத்தவர்களும் உடந்தை.
இப்போது வேட்பாளர் பட்டியலை பார்த்தால் தனது ஆதரவாளர்களாக/உறவினர்களாக இருக்க வேண்டும், தான் மட்டுமே வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சத்தியராஜ் – வடிவேலு ஒரு கிரிக்கெட் அணியை தயார் செய்தது போல ஒரு வேட்பாளர் பட்டியல். ஏனைய இளம் ஆளுமைமிக்க புதியவர்களின் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளார்.
பெண்களுக்கு வாய்ப்பு கொடுப்பது என்பது மிகவும் ஏற்புடையது. ஐம்பது வீதம் பெண்களை நிறுத்த வேண்டும். ஆனால் விருப்பம் கோரி விண்ணப்பம் அளித்த தகுதிவாய்ந்தவர்கள் இருக்கும் போது குறிப்பாக கடந்த முறை வஞ்சகமாக சொற்ப வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டவர் இருக்கும் போது, விண்ணப்பத்திற்கான முடிவுத் திகதி முடிந்து மூன்று நான்கு நாட்களின் பின் தன் செம்பு மற்றும் உறவினரை பெண்கள் என்று வாய்ப்பினை திணித்ததை கூட இந்த முதுகெலும்பில்லாதவர்கள் பார்த்து கொண்டு இருக்கிறாரர்கள்.
போட்டிடுபவர் குறைந்த பட்சம் இரண்டு வருடங்கள் கட்சியின் உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற சட்டம் எதற்கெடுத்தாலும் சட்டம் கதைக்கும் சுத்து மாதத்திற்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.
இப்பொழுது இருக்கும் ஒரே தெரிவு இம்முறை வஞ்சிக்கப்பட்டவர்கள் கட்சியை விட்டு வெளியேறி சுயேட்சையாக நிற்பது மட்டும் தான். வாக்குகள் பிரியும் என்றாலும் வேறு வழியில்லை. இல்லை எனில் உண்மையான தமிழரசுக்கட்சி ஆதரவாளர்கள் தங்கள் கட்சி சின்னத்துக்கு இடும் வாக்குகள் விழலுக்கு இறைத்த நீராகும்..