யாழில் 56 வயது நாகராணியின் திருவிளையாடல்!!
நபீஸாவை எதிர்ப்பவர்களை எதிர்க்கின்றேன் ![]()
மீ:- நாகராணி நான்சி ஆகும்போது ஏன் எதுக்கு என்று கேட்காதவர்கள் எல்லாம் நாகராணி நபீஸா ஆகும்போது மட்டும் ஏன் பதறித் துடிக்கின்றீர்கள்?
கீ:- ஐயோ! bro நாகராணி நான்சி ஆனால் மதம் மாற்றம் ஆனால் நாகராணி நபீஸா ஆனால் அது இனம் மாற்றம். அதனாலதான் bro துடிக்கிறம் பதறுறம்.
மீ:- நாகராணி இனம் மாறலயே மதம் மட்டும்தான் மாறினாங்க, அதோட மதம் மாறினவங்க தங்க பெயரை மாத்துறது வழமையான ஒன்னுதானே, இதுவே அவங்க கிறிஸ்தவம் மாறி இருந்தா நான்சி என்னு மாத்தி இருப்பாங்கதானே அதுபோலதான் இதுவும். நாகராணியோட மன்னிக்கவும் நபீஸாவோட பிறப்பு சான்றிதழ்ல இப்பவும் இலங்கை தமிழர் என்னுதான் இருக்கும் அதனால எந்த கவலையும் இல்லை.
கீ:- நீங்க என்னதான் சொன்னாலும் இது இனம் மாற்றம்தான் மதம் மாற்றம் இல்லை… மதம் மாற்றம் அவர் அவர் விருப்பம் ஆனால் இனம் மாற்றம் இனவழிப்பு..
மீ:- சரி இந்த நாகராணி நபீஸாவா மாறினதுக்கும் நான்சியா மாறி இருந்தா அதுக்கும் என்ன வித்தியாசம்?
கீ:- நான்சியா மாறி இருந்தா அவங்க தமிழராத்தான் இருந்து இருப்பாங்க, அவங்க பிள்ளைகள் வம்சம் எல்லாம் தமிழராத்தான் இருந்து இருப்பாங்க ஆனால் நபீஸாவா மாறினதால இனி அவங்க வம்சமே முசிலீம் ஆகீட்டாங்க.
மீ:- அடே இந்த நபீஸாக்கு வயசு 56, சரி விடு 26 என்னே எடுத்துக்குவம், நான் கேட்கிற கேள்வி ஒன்னுக்கு பதில் சொல்லு, ஆமா “தமிழன் என்னா யாரு? அவன் எப்படி இருக்கனும்?”
கீ:- தமிழன் என்னா தமிழ் குடியில பிறந்த இருக்கனும், தமிழ் பேசனும், தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றனும், தமிழர் வழிபாட்டு முறைகளை பின்பற்றனும், தமிழர் கலைகளை கற்கனும், தமிழ் இனத்தினுடைய மரபின் தொடர்ச்சி அறாமல் பாதுகாக்கிறவந்தான் தமிழன்
…
மீ:- சூப்பர்டா… அதுசரி இப்ப நாகராணி நபீஸாவா மாறினதால இவற்றில எதை எல்லாம் பின்பற்ற மாட்டா, நாகராணி நான்சியா மாறி இருந்தாலும் இவற்றிலை எதை எல்லாம் பின்பற்றுவா?
கீ:- அதுவந்து!!!
மீ:- எதுவந்து???
கீ:- இந்த ரெண்டுபேருமே இதிலை எதையும் பின்பற்ற மாட்டாங்க.
மீ:- அப்றம் ஏன்டா நான்சியை எதிர்க்காத நீ நபீஸாவை மட்டும் எதிர்க்கிறாய்???
கீ:- நான்சி என்னதான் 10 பிள்ளை பெத்தாலும் அவ பிள்ளைகள் எல்லாம் “இலங்கை தமிழர்” என்னுதான் பிறப்புச் சான்றிதழ்ல இருக்கும் ஆனால் நபீஸாக்கு அப்படி இல்லை…
மீ:- அப்போ உனக்கு பெயருக்கு தமிழரா இருந்தா கானுமே தவிர உண்மையான தமிழரா இருக்க தேவை இல்லை. அப்படியா???
கீ:- எப்படி எண்டாலும் தமிழர் என்னுதானே இருக்கு. அது போதும்.
மீ:- ம்ம்ம்ம்… சரி உன்னை ஒரு personal கேள்வி கேட்கிறன் கோவிக்காதை, நீ இன்னும் கலியாணம் கட்டலைத்தானே, உனக்கு 10 ஆண்களோட பழகி, வாழ்ந்து, ஏமாத்தின ஒரு பெண்ணை கட்டி வைச்சால் ஏற்பியா? ஆனால் வெளிய அந்த பெண்ணுக்கு “கற்புக்கரசி” என்னுதான் பெயர், யாருமே அவளை எந்த குத்தம் குறையும் சொல்ல மாட்டாங்க…
கீ:- அது எப்படி அவளை கட்டுறது, என்னதான் வெளிய நல்லவள்னு ஊரை ஏமாத்தினாலும், அவ ஒரு உதவத்தவ என்னு எனக்கு தெரியுமே, அது தெரிஞ்சும் எவனாச்சும் அவளை கட்டுவானா???
மீ:- அட அவ எப்படி இருந்தால் என்னடா, வெளியதானே அவளுக்கு கற்புக்கரசி என்னு பெயர் இருக்கே, உனக்குத்தானே உண்மையை விட வெளிய என்ன பெயர் இருக்கு என்னுறதுதான் முக்கியம் என்னு கொஞ்சம் முதல் சொன்னியே…
கீ:- ஆளை விடு சாமி…. நபீஸா வாழ்க ![]()

