புதினங்களின் சங்கமம்

யாழில் மாணவிகளுக்கு பட்டப்பகலில் பஸ்சில் தனது அந்தரங்கத்தை காட்டியது யார்? வீடியோ

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச  சுழிபுரம் விக்டோரியா கல்லூரிக்கு பேருந்து ஒன்றினை வழங்கினார். குறித்த பேருந்துக்கான பூஜை வழிபாடுகள் வழக்கம்பரை ஆலயத்தில் இடம்பெற்றது.
இந்நிலையில் அங்கு பாடசாலை மாணவர்கள், அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் என பலர் குழுமியிருந்தனர்.
இதன்போது அங்கு கடமையில் இருந்த சஜித்தின் ஊடகப் பிரிவினர் அநாகரீகமான முறையில் உடையினை அணிந்திருந்தனர். இதனால் அங்கிருந்த மாணவர்கள் முகம் சுழித்து அசௌகரியங்களை எதிர்கொண்டதை அவதானிக்க முடிந்தது.
May be an image of 7 people and text
மாணவர்களை மணிக்கணக்காக காக்க வைத்த சஜித்.
சஜித் பிரேமதாச அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள நிலையில் பல்வேறு நிகழ்வுகளில் பங்குபற்றி வருகின்றார்.
அந்தவகையில் இன்று புதன்கிழமை சுழிபுரம் விக்டோரியா கல்லூரிக்கு பேருந்து கையளிக்கும் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த நிகழ்வு பி.ப 2.00 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் மாணவர்கள் இரண்டு மணிக்கு முன்னர் குறித்த நிகழ்வுக்கு தயாராக இருந்தனர். இருப்பினும் ஏற்பாடு செயாயப்பட்ட நேரத்தில் இருந்து சுமார் ஒன்றரை மணிநேரத்துக்கு பின்னரே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் குறித்த நிகழ்வுக்கு வருகை தந்திருந்தார்.
இதனால் மாணவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சோர்வடைந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
May be an image of 1 personMay be an image of one or more people and textMay be an image of 8 peopleMay be an image of 7 people and street
ஊடகவியலாளர்களை காணொளி பதிவு செய்ய வேண்டாம் என மிரட்டிய சஜித்தின் பாதுகாப்பு பிரிவு.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் இன்றையதினம் சுழிபுரம் விக்டோரியா கல்லூரிக்கு பேருந்து ஒன்றினை வழங்கினார்.
பேருந்துக்கு வழக்கம்பரை அம்மன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து சஜித் பிரேமதாச அவர்கள் பேருந்தில் அமர்ந்து அதனை செலுத்துவதற்கு தயாராகும் போது ஊடகவியலாளர்கள் அதனை காணொளி மற்றும் புகைப்படம் எடுத்தனர்.
உடனே அங்கிருந்த சஜித்தின் பாதுகாப்பு பிரிவினர் ஊடகவியலாளர்களின் கேமராவினை கையால் தட்டி புகைப்படம் மற்றும் காணொளி எடுக்க வேண்டாம் என அச்சுறுத்தினர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
May be an image of 8 people and text