யாழில் கஞ்சா செடி வளர்த்தவருக்கு நடந்த கதி!!
யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் உள்ள வீடொன்றில் கஞ்சா செடி வளர்த்த நபரொருவர் இன்றையதினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

