நடு வெளியில் உச்சி வெயிலில் அங்கும் இங்கும் என மாறி மாறி ஓடி…. (Photos)
நடு வெளியில் உச்சி வெயிலில் அங்கும் இங்கும் என மாறி மாறி ஓடி தரிந்து செல்லும் வாகனங்களை மறிந்து மறித்து கொண்டு இருந்தார்கள் பாலைப்பழப் பருவம் என்பதால் இவர்கள் இப்படி நிற்கிறார்களா என்று சிந்தித்தேன் ஆனால் இல்லை எனது கணிப்பு 100% பிழையானது அனைவருக்கும் சிரித்தி முகத்துடன் அனைவருக்கும் கஞ்சி வழங்கி கொண்டு இருந்தார்கள் நானும் நிறுத்த பட்டோம் இந்த கஞ்சி ஏன் கொடுக்கிறீர்கள் என கேட்டோம் அது முள்ளிவாய்க்கால் கஞ்சி என்றார்கள் ஒரு பெருமிதத்துடன் வங்கி அருந்தி விட்டு ஏதோ ஒரு சந்தோசத்தில் வந்தோம் …
எந்த விளம்பரமுல் இல்லாமல் செய்த “மக்கள் காப்பகத்திற்கு” தலை வணங்குகிறோம்
எல்லாத்தையும் மறந்து ஒரு கூட்டம் இருக்கு, எல்லாத்தையும் மறைக்கப்பட்டு ஒரு கூட்டம் சுற்றுகிறது, எல்லாத்தையும் மறந்து ரேசிங் செய்துகொண்டு வாளை விசிக்கி காட்டிங்கொண்டும் திரிகிறது ஆனால் இந்த சின்னஞ் சிறுசுகளுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி என்றால் என்ன வெற்று தெரிந்து பரிமாறுகிறது. எம் சொந்தங்கள் பட்ட வலியும், துன்பமும் என்றும் கடத்தப்படுக்கொண்டே இருக்கும்..
முள்ளிவாய்க்கால் கஞ்சியை அந்த சூழ்நிலையில் இருந்தவர்கள் எழுதினாலே அந்த எழுத்துக்களில் வலியும்,உணர்வும்,உயிர்ப்பும் இருக்கும் எழுத கூடியவர்கள் எழுதுங்கள்
..