புதினங்களின் சங்கமம்

கணவன் வெளிநாட்டில்!! வ்வுனியாவில் 28 இளம் குடும்பப் பெண் சடலமாக மீட்பு!!

வவுனியா,குருமன்காடு காளி கோவில் வீதியிலுள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து 29 வயதான பெண்ணொருவரின் சடலமொன்று இன்று பொலிஸாரினால் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்ணின் கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்துள்ள நிலையில் அப்பெண் தனது 7 வயது மகனுடன் வசித்து வந்தமை பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பெண்னின் மரணத்திற்கான காரணம் வெளியாகாத நிலையில் மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.