புதினங்களின் சங்கமம்

காதில் வலி ஏற்பட்டு அலறிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

வியட்நாமை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன், நள்ளிரவில் கடுமையான காது வலியால் துடித்துள்ளார்.உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்த அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது உள்ளே ஒரு கரப்பான் பூச்சி இருப்பதை பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் எண்டோஸ்கோப்பி மூலம் அடுத்த சில நிமிடங்களில் கரப்பான் பூச்சி வெளியில் எடுக்கப்பட்டது.

இதுகுறித்து மருத்துவர் கூறுகையில், உள்ளே மிகப்பெரிய கரப்பான் பூச்சி இருப்பதை கண்டு நான் பெரும் அதிர்ச்சியடைந்தேன். அந்தப் பெண்ணின் காதில் கீறல் ஏற்பட்டிருந்தது. கீறல் கரப்பான் பூச்சியால் ஏற்பட்டதா அல்லது அதை அகற்றுவதில் ஏற்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.அது குணமடைய சில நாட்கள் ஆகலாம்.

ஈரமான நேரத்தில் பூச்சிகள் தங்குவதற்கு உயர்ந்த இடங்களுக்கு செல்லும். அந்த வகையில் காதுப்பகுதியை குகை என நினைத்து கரப்பான் பூச்சி புகுந்திருக்கலாம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.