யாழிலில் ஆசிரியை, சிறைக்கைதி உட்பட பலருக்கு கொரோனா!! தீவிரமாகப் பரவும் ஆபத்து!!

யாழ்ப்பாணம் சிறைச்சாலை கைதி ஒருவர், ஆசிரியை உள்ளிட்ட ஆறு பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் மருத்துவர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். சிறைச்சாலை கைதிகள் எட்டுப் பேர் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கடந்த தினத்தில் கொண்டு செல்லப்பட்டிருந்த போது அவர்களிடம் பெறப்பட்டிருந்த மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் கைதி ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன் வடமராட்சி பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவருக்கும் மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர் உருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் மருத்துவர் ஆர்.கேதீஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னைய செய்தி….

யாழ். போதனா வைத்தியசாலை கொரோனா ஆய்வுகூடத்தில் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஆறு பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் இருந்து பெறப்பட்டிருந்த 442 பேரின் மாதிரிகள் இன்றைய தினம் (பெப்-21) யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூட பரிசோதனை முடிவுகள் தொடர்பான நாளாந்த அறிக்கையில் குறித்த பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் ஆறு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

முல்லைத்தீவு மாவட்டத்தில் – 03 பேருக்கு

யாழ் மாவட்டத்தில் – 02 பேருக்கு

கிளிநொச்சி மாவட்டத்தில் – ஒருவருககு

என வடமாகாணத்தில் ஆறு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)