மட்டக்களப்பில் கிருஸ்ணசாமியை வெட்டிக் கொன்ற ரவுடியின் கைகால்களை முறித்த மக்கள்!! (Photos)
கிரான் பிரதேசெயலாளர் பிரிவின் முறுத்தானையில் சனிக்கிழமை (6) மாலை வயோதிபர் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
நேற்று பிற்பகல் வேளை நாற்பதாவது வில் முறுத்தானையில் உள்ள தமது வயலில் உள்ள வாடியில் அயலவர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது கத்தியுடன் வந்த நபர் ஒருவர் முதியவரை தலையில் வெட்டி காயப்படுத்தி விட்டு, தப்பி ஓடியுள்ளதாக முதியவரின் மகன் தகவல் தெரிவித்தார்.
காயமடைந்தவர் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.
அந்த பிரதேசத்தில் பொதுமக்களிற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய 34 வயதான கொலையாளியை, பொதுமக்கள் பிடித்து அடித்து, துவைத்து, வாழைச்சேனை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.அவரது கால், கைகள் அடித்து முறிக்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர் நாளாந்தம் முதியவரின் வயல் காணிக்குள் அத்துமீறி சென்று, அங்குள்ள பலன் தரும் மரங்களில் உள்ள காய் கனிகளை களவாடுவது, அவற்றினை சேதமாக்குவது என விசமத்தனத்தில் ஈடுபட்டுள்ளார்.
அத்துடன், மதுபான போத்தல்களை காணிக்குள் வீசுவது போன்ற விசமத்தனங்களிலும் ஈடுபட்டுள்ளார்.
இந்த விசமியை முதியவர் பலமுறை கண்டித்துள்ளார்.
மாவடிவேம்பை சேர்ந்த இந்த விசமி, முறுத்தானை பகுதியில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டிருந்தார். பொதுமக்களை அடிக்கடி தாக்குவது, வெட்டுவது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் அவர் மீது உள்ளது. பொலிஸ் முறைப்பாடுகளும் உள்ளது.
கிருஷ்ணப்பிள்ளை அண்மையில் வீடு சென்றுவிட்டு திரும்பியபோது, அவரது வயல் காணியை இந்த விசமி சேதமாக்கியிருந்தார். இதனை கிருஷ்ணப்பிள்ளை கண்டித்துள்ளார்.
இதற்கு பழிவாங்கும் விதமாக, இந்த கொலை நடந்தது.
முதியவர் இன்னொருவருடன் பேசிக் கொண்டிருந்த போது, பின்னால் வந்த விசமி, அவரது தலையில் வெட்டினார்.
படுகாயமடைந்த முதியவர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதும், அவர் வழியில் உயிரிழந்தார்.
அந்த பகுதி முழுவதுக்கும் அச்சுறுத்தலாக விளங்கிய விசமியை, ஊர் மக்ள் ஒன்றிணைந்து வளைத்துப் பிடித்து, அடித்து துவம்சம் செய்துள்ளனர். விசமியின் கை, கால்கள் உடைக்கப்பட்டுள்ளன. உயிராபத்தான நிலையில் விசமி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு நேரடியாக சென்ற வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.எச்.எம்.றம்சீன் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சட்ட வைத்தியரின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிசாருக்கு கட்டளை பணித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மாவட்ட குற்ற தடயவியல் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

