புதினங்களின் சங்கமம்

பிரான்ஸ் காதலி… நமஸ்தே ஹொட்டல், வைன் தொழிற்சாலை: இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரன் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்!

சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரராகவும், பாதாள உலகக் குழு தலைவராகவும் அறியப்படும் இரத்மலானை குடு அஞ்சு, பிரான்சில் அகதியாக வாழ்ந்து கொண்டு அங்கு மிகப்பெரிய வர்த்தகங்களை நடத்த எவ்வாறு பணத்தை பெற்றார் என்பது பற்றி பிரான்ஸ் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் 26ஆம் திகதி பிரான்ஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குடு அஞ்சு என அழைக்கப்படும் சின்ஹார அமல் ஷமிந்த சில்வா, சர்வதேச பொலிசாரால் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்ட தேடப்படுபவர்.

தனது மனைவியை கைவிட்டு, பிரான்ஸ் யுவதியை திருமணம் செய்ய தீர்மானித்திருந்த நிலையில், அஞ்சுவுக்கும் மனைவிக்குமிடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அஞ்சு மனைவியை தாக்கினார். இது குறித்து மனைவி பிரான்ஸ் பொலிசாரிடம் முறையிட்டதுடன், அஞ்சு சர்வதேச பொலிசாரால் தேடப்படுபவர் என்ற தகவலையும் வழங்கியுள்ளார்.

கைது செய்யப்பட்ட போது அஞ்சு அகதியாக வாழ்க்கை நடத்தியவர்.

பண மோசடியின் கீழ் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் நாட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இரத்மலானை குடு அஞ்சு கடந்த 4ஆம் திகதி பிரான்ஸ் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, அவர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், பணமோசடியின் கீழ் சொத்துக்களை எவ்வாறு பெற்றுக்கொண்டார் என்பது தொடர்பில் பிரான்ஸ் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பணமோசடி என்பது பிரான்ஸ் சட்டத்தின் கீழ் மிகவும் கடுமையான குற்றமாக கருதப்படுகிறது.

குடு அஞ்சுவின் காதலி என்று கூறப்படும் பிரான்ஸ் யுவதியின் பெயரில் பிரான்சில் சூப்பர் உணவகம் ஒன்று வாங்கி நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நமஸ்தே ரெஸ்ரோரண்ட் என்ற பெயரில் அது இயங்கி வருகிறது.

அஞ்சுவின் போதைப்பொருள் வருமானம் குறித்த பிரான்ஸ் யுவதியின் பெயரிலேயே கணிசமான முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

நமஸ்தே உணவகத்தில் அடிக்கடி பார்ட்டிகள் நடப்பதாகவும், குடு அஞ்சுவின் பிரான்ஸ் காதலியும் கலந்து கொண்டு நடனம் ஆடுவதாகவும் அந்நாட்டின் நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பிரான்ஸ் நாட்டின் போர்டாக்ஸ் பகுதியில் வேறு ஒருவரின் பெயரில் வைன் தொழிற்சாலை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

போதைப்பொருள் கடத்தல்காரர்களாகவும் பாதாள உலக செயற்பாட்டாளர்களாகவும் கருதப்படும் ஜூட் பிரியந்த மற்றும் பதுவத்த சாமர ஆகியோருடன் ரத்மலானை போதைப்பொருள் கடத்தல்காரன் அஞ்சு, பிரான்சுக்கு தப்பிச் சென்று பிரான்சில் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

குடு அஞ்சுவுக்கும் அவரது மனைவிக்கும் இடையே நிலவி வந்த தகராறுகளைத் தீர்த்து, குடும்பத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

பிரான்ஸ் யுவதிியுடனான உறவை நிறுத்திவிட்டு பணம் கொடுப்பதை நிறுத்தினால் மட்டுமே அவருடன் மீண்டும் குடும்ப வாழ்க்கை வாழ விரும்புவதாக குடு அஞ்சுவின் மனைவி கூறியதாகவும் தெரியவந்துள்ளது.

பிரான்ஸ் யுவதியுடனான தனது உறவை நிறுத்த முடியாது என சிறையில் உள்ள அஞ்சு தெரிவித்துள்ளார்.

அஞ்சுவுக்கு டுபாயில் தண்ணீர் போத்தல் தொழிற்சாலை, ஜிம் மையம், சூப்பர் உணவகம் மற்றும் கட்டிட வளாகம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.