யாழில் மின்னல் தாக்கி உயிரிழந்த CTB சாரதியின் செத்தவீட்டில் கூடிய கூட்டம்!! கொரோனா கொத்தனி ஏற்படும் அபாயம்!! (Video)
யாழ்ப்பாணம் அச்சுவேலிப் பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தவரின் இறுதிச் சடங்கில் பலநூற்றுக்கணக்கானோர் திரண்டு பேரணியாக நகர்ந்து சுடுகாட்டிலும் நிகழ்வில் பங்குகொணடிருக்கின்றனர்.
அச்சுவேலி நாவற்காட்டைச் சேர்ந்தவரான அரச பேருந்துச் சாரதி மதனபாலன் கடந்த 02ஆம் திகதி மின்னல் தாக்கியதில் உயிரிழந்திருந்தார்.
அவரின் இறுதி நிகழ்வுகள் இன்று நடைபெற்றன.
அவருடைய சடலம் அல்வாவில் வைத்து இறுதி நிகழ்வு நடைபெற்று பின்னர் சடலம் அச்சுவேலியில் உள்ள நாவற்காட்டில் உள்ள வீட்டிலும் இறுதிச் சடங்குகள் நடைபெற்றுள்ளன.
அதன் பின்னர் அச்சுவேலி முழங்கன் மயானத்திற்கு சடலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அவர் பயன்படுத்திய அரச பேருந்தும் இறுதிச் சடங்கில் பங்கேற்றுள்ளது. பருத்தித்துறை வீதியூடாக இடம்பெற்ற பயணத்தின்போதும், மயானத்திற்கு சென்றபோதும் பல நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செத்தவீட்டில் பெருமளவானோர் கலந்து கொண்டதால் அங்கு கொரோனா கொத்தனி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
