காத்தான்குடி முஸ்லீம் காவாலி நியூஸ்லாந்தில் செய்த அலங்கோல வேலை!! பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்!!

நியூசிலாந்தின் ஒக்லாந்திலுள்ள பல்பொருள் அங்காடியில் பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவர் நேற்று நியூசிலாந்தின் ஒக்லாந்திலுள்ள பல்பொருள் அங்காடியில் மக்கள் மீது தாக்குதல் நடத்திய நிலையில், பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டவர் மட்டக்களப்பு காத்தான்குடியை சேர்ந்த மொஹமட் எம். சம்சுதீன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டிருந்த அவர், சிரியாவிற்கு சென்று ஐ.எஸ் அமைப்புடன் இணைய திட்டமிட்டதாக நியூசிலாந்து அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனினும், ஒக்லாந்து விமான நிலையத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.
பின்னர் நியூசிலாந்தில் தனிநபர் தாக்கதல் நடத்த திட்டமிட்ட நிலையில் கைதாகி, கண்காணிப்பு காலத்தில் இருந்த போது நேற்று பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டார்.
அவரால் கத்தியால் குத்தப்பட்ட 7 பேர் காயமடைந்தனர். அதில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
எவ்வாறாயினும், தாக்குதலை மேற்கொள்ளப்பட்ட குறித்த நபர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு காத்தான்குடி முதலாம் வட்டாரத்தினை சேர்ந்த முகமட் சம்சுதீன் ஆதில் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் எட்டு வயதிலேயே கொழும்பு சென்று அங்கு கொழும்பு இந்துக்கல்லூரியில் கல்வி கற்றுள்ளதாகவும் பின்னர் 2011ஆம் ஆண்டு நியூசிலாந்து சென்றுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வுத் துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

நியுசிலாந்தின் ஆக்லாந்தில் உள்ள லைன் பல்பொருள் அங்காடியில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவர் இலங்கை காத்தான்குடியைச் சேர்ந்த 31 வயதுடைய முகமது சம்சூதீன் ஆதில் என அரச புனலாய்வு துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர் தொடர்பான விசாரனைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவர் இலங்கை சேர்ந்தவர் எனவும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்டவர் என அந்த நாட்டு பிரதமர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் இவர் தொடர்பாக குற்ற புலனாய்வு பிரிவினர் மற்றும் அரச புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரனையில் இவர் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டார்.

காத்தான்குடி கபூர் கடை வீதியைச் சேர்ந்த அதிபரான சம்சூதீன் முகமது இஸ்மாயில் சரிதா தம்பதிகளுக்கு 1989 ம் ஆண்டு கடைசி மகனானபிறந்தவர் முகமது சம்சூதீன் ஆதில் அவருக்கு சகோதரியும் 2 இரண்டு சகோதரன்களும் உள்ளனர் .
ஆதில்ஆரம்ப கல்வியை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் பயின்று வந்துள்ள நிலையில் நாட்டில் ஏற்பட்ட யுத்த காரணமாக 1998 ம் ஆண்டு ஆதிலுக்கு 8 வயதில் இருக்கும் போது அவரது குடும்பத்தினர்இடம்பெயர்ந்து கொழும்பு மொரட்டுவையில் வாழ்ந்துள்ளனர்

இந்த நிலையில் ஆதில் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் க.பொ. உயர்தரம் கல்வி கற்று 2006ம் ஆண்டு பரிட்சை எழுதிய பின்னர் 2011 ம் ஆண்டு நியூசிலாந்திற்கு சென்று குடியேறியுள்ளார்
. இவரின் தந்தையார் மாளிகாவத்தை அல் ஹிதாய பாடசாலையில் 2008 ஓய்வு பெறும் வரை அந்த பாடசாலை அதிபராக கடமையற்றி வந்து நிலையில் அவரது மகள் கனடாவில் குடியேறி வாழ்ந்துவருதுடன் அவருடன்கனடாவிற்கு சென்று குடியேறி வாழந்துவருகின்றார்.எ

அதேவேளை ஒரு சகோதாரன்; கட்டாரில் திருமணம் முடித்து வாழ்ந்துவருதாகவும் அடுத்த சகோதரன் சவூதியில் இருப்பதாகவும் கொலன்னாவையில் சொந்த வீட்டை வாடகைக்கு தாயார் கொடுத்துவிட்டு தமது காத்தான்குடி கபூர் கடை வீதியிலுள்ள வீட்டில் தாயார் வசித்துவருகின்றார்எ ன பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பா அரச புலனாய்வு பிரிவினர் மற்றும் காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றதாக அவர் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)