புதினங்களின் சங்கமம்

மூன்று மாதங்களில்- யாழிலிருந்து 1,600 பேர் இராணுவத்தில் இணைவு

தற்போது இடம்பெற்றுவரும் இராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கையின் போது யாழில் இருந்து கடந்த 3 மாதங்களில் சுமார் 1,600 தமிழ் இளைஞர், யுவதிகள் இராணுவத்தில் இணைந்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண இளைய சமூகத்தின் பெரும் எண்ணிக்கையில் இராணுவத்தில் இணைவதானது முப்படையினரின் அர்ப்பணிப்பான சேவைக்குக் கிடைத்துள்ள அங்கீகாரம் எனவும் அவர் குறிப்பிட்டார்.