புதினங்களின் சங்கமம்

பேலியகொட கொத்தணி: 21 நாட்களேயான பச்சிளம் குழந்தையையும் தாக்கியது கொரோனா!

பேலியகொட கொத்தணியுடன் தொடர்புபட்டு 21 நாட்களேயான பச்சிளம் குழந்தையும் தாயும் கொரோனா தொற்று உறுதியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்காலை, குடாவெல்ல பகுதியில் 25 வயதான பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து அவரது 21 நாட்களேயான பச்சிளம் குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அக் குழந்தைக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

இவ்வாறு தாய்-சேய் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

பேலியகொட மீன் சந்தையில் பணியாற்றிவரும் கிரிபத்கொட பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டு அவருடன் தொடர்புடையவர்கள் கண்டறியப்பட்டிருந்தனர்.

இதன்போது குறித்த நபரின் வீட்டில் ஒருவாரம் தங்கிச் சென்ற உறவுக்கார குடும்பம் குறித்த தகவல் பெறப்பட்டிருந்தது. இதையடுத்து குறித்த 25 வயதுடைய இளம் தாயொருவர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

குறித்த பரிசோதனையில் கண்டி நகரில் வசித்துவரும் இளம் தாய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனால் குறித்த இளம் தாயின் குழந்தைக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

21 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.