புதினங்களின் சங்கமம்

மின்சாரம் தாக்கி கிளிநொச்சியில் குடும்பஸ்தர் மரணம்! (Photos)

கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பாரதிபுரம் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒரு பிள்ளையின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாரதிபுரம் YMCA வீதியில் வசித்துவந்த 32 வயதுடைய ஜெயபாலன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

வீட்டில் ஏற்பட்ட மின் ஒழுக்கினாலேயே அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

மின்சாரம் தாக்கிய நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும் அவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

No photo description available.May be an image of outdoors