புதினங்களின் சங்கமம்

திருநெல்வேலியைச் சூழ இராணுவத்தினர் குவிப்பு! வீடுகளிலிருந்து மக்கள் வெளியேறக் கட்டுப்பாடு!

யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் 143 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் திருநெல்வேலி மற்றும் அதற்கு நெருக்கமாக உள்ள கிராமங்களில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற தடைஏற்படுத்தப்பட்டுவருகிறது.

திருநெல்வேலி, கோண்டாவில் கிழக்கு, பாற்பண்ணை வீதி. நல்லுரின் ஒரு பகுதி உட்பட்ட பகுதிகளில் பெருமளவு இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஒழுங்கைகளிலிருந்தும் வீடுகளிலிருந்தும் வெளியேறும் மக்கள் தடுத்துநிறுத்தப்பட்டு மிக அவசிய தேவைகளுக்கு மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டுவருகின்றனர்.
அதிகளவான கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் யாழ். திருநெல்வேலி – பாற்பண்ணை கிராமம் முடக்கப்பட்டுள்ளது.

நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்கு உள்பட்ட திருநெல்வேலி மத்தி வடக்கு – பாற்பணை கிராம அலுவலகர் பிரிவு முற்றாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தக் கிராமத்தில் 51 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டது என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.