யாழ்.நகர் நவீன சந்தைத் தொகுதியின் ஒரு பகுதி முடக்கம்! 09 பேருக்கு கொரோனா! (இணைப்பு)
யாழ்.நகரின் நவீன சந்தை (நியூமாக்கற்)த் தொகுதியின் ஒரு பகுதியில் எழுமாற்றாக 60 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 09 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து மரக்கறி வியாபாரம், வெற்றிலை வியாபாரம் உட்பட்ட வியாபார நடவடிக்கைகள் நடைபெறும் பகுதி முடக்கப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் சற்று முன்னர் அருவிக்குத் தெரிவித்தார்.
மேலதிக தொற்றாளர்கள் விபரம்
யாழ்ப்பாணம் ஆய்வுகூடங்களில் 600 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவற்றில் 23 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட யாழ்.நகர் 2ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த ஒருவர்,
யாழ்.மாநகர எல்லைக்குள் 09 பேர் (தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள்) யாழ்.நவீன சந்தைத் தொகுதியில் 60 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட எழுமாற்றான பரிசோதனையில் 09 பேருக்கு தொற்று (மூவர் பனை உற்பத்தி பொருட்கள் வியாபாரிகள், மூவர் மரக்கறி வியாபாரிகள்)
கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவர் (காரைநகர் பேருந்து சாலை ஊழியர்களின் உறவினர்கள்)
மன்னாரில்
மன்னார் நகர் பொது வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் ஒருவர்
கிளிநொச்சி கிளிநொச்சி கண்டாவளையில் ஒருவர்
தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

