யாழ் இந்துக்கல்லுாரி ஆசிரியரின் மூர்க்கத்தனம்!! மாணவன் யாழ் போதனா வைத்தியசாலையில்!!
யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் தரம் 10 கல்வி கற்கும் மாணவனை ஆசிரியர் ஒருவர் கடுமையாக தாக்கிய சம்பவம் தொடர்பில் தற்பொழுது மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
சக மாணவன் ஒருவருடைய 50ரூபா பணத்தினை பிறிதொரு நண்பன் திருடியுள்ளார்.
பணத்தினை இழந்த நண்பன் வீடு செல்வதற்கு பணம் இல்லாத காரணத்தினால் குறித்த மாணவன் பேருந்துக்காக ஐம்பது ரூபாய் பணத்தினை கொடுத்துள்ளார்.
50 ரூபா கொடுப்பதற்கு நீ என்ன பெரிய ஆலா என கேட்டு ஆசிரியர் கடுமையாக தாக்கியுள்ளதுடன் கையினாலும் தாக்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சமூகத்தினால் மூடி மறைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவனின் தாய் உயரதிகாரியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் சட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன.
அத்துடன் குறித்த மாணவனை தாக்கிய ஆசிரியர் ,ஒரு ஆசிரியரை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றால் நீ உருப்பட மாட்டாய் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தான் செய்தது தவறு என மூன்று தடவைகள் கடிதம் மூலம் எழுதி வாங்கியவுடன் இந்த விடயத்தினை பெரிதுபடுத்த வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அம்பது ரூபா கொடுத்தது பெரிய குற்றமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அவ்வாறு குறித்த மாணவனை தாக்குவதற்கு ஆசிரியரின் மனநிலை தொடர்பில் மனநல வைத்தியரிடம் காண்பிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் தலைமை பீட பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். மனித உரிமை ஆணைக்குழு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்குரிய ஆலோசனைகளை வழங்கி உள்ளது.rjkapilan

