புதினங்களின் சங்கமம்

மன்னாரில் போதைப் பொருள் தடுப்பதில் முன்னின்ற தமிழ் காவல்துறை பொறுப்பதிகாரி திடீர் இடமாற்றம்!!

மன்னார் பொலிஸ் நிலைய தலைமையக பொறுப்பதிகாரியாக கடந்த 2 வருடங்களாக கடமையாற்றிய எஸ்.கிருஸாந்தன் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(18) கண்டிக்கு இடமாற்றம் பெற்று சென்றுள்ளார்.

மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நொச்சியாகம பகுதியை சேர்ந்த சி.ஏ.ஜெயதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

மன்னார் பொலிஸ் நிலைய தலைமையக பொறுப்பதிகாரியாக கடந்த 2 வருடங்களாக கடமையாற்றிய எஸ்.கிருஸாந்தன் மாவட்டத்தில் பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு மக்களிடம் நன்மதிப்பைப் பெற்றுள்ளார்.

-குறிப்பாக பல வருடங்களின் பின்னர் தமிழராக ஒருவர் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்ட நிலையில் மக்களிடம் அன்பாகவும் பன்புடனும் தனது கடமையினை மேற்கொடுள்ளார்.

-போதைப் பொருள் தடுப்பு , விழிப்புக்குழு அமைத்தல் மற்றும் தற்போதைய கொரோனா அச்சுறுத்தல் கால கட்டத்தில் மக்களின் பிரச்சினைகளை உரிய முறையில் அனுகி தீர்த்து வைத்து மன்னார் மக்களிடம் நன் மதிப்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.