சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்….
#யதுகுலன்….!
என்னிலும் இளையவன். எனினும் எம் விக்ரோறியா அன்னையிடம் என்னோடு ஒன்றாக படித்தவன்.
நகைச்சுவையாளன். அவிச்ச மீன் துடிக்குது என்றாற்போல எல்லோரையும் சிரிக்க வைத்துப் பேசுவான்.
இல்லாத கதைகளையும் இருப்பது போல பேசுவதில் இவன் “முல்லா” கதையாளன்.
இதனால் எல்லோரையும் தன் வசப்படுத்தி ஈர்த்துவைத்திருப்பான்.
வகுப்பறையில் பாடங்கள் நடைபெறாத நேரங்களின் இவனது கதைகளே எமக்கு பொழுதுபோக்கு.
தன் வயதைவிட அதிக வயதுடையோரையும் நெருக்கமான நண்பர்களாக்கி வைத்திருப்பான்.
துணிச்சலும் ஆற்றலும் உடையவன்.
பொன்னாலைக் கண்ணன் மீது அளவற்ற பக்தி கொண்டவன்.
கண்ணனுக்கு ஒவ்வொரு இரவும் {11 மணியைத்தாண்டி} இறுதியாக அடிக்கப்படும் தேங்காயும் இறுதியாக ஏற்றப்படும் கற்பூர தீபமும் {நேற்றிரவு வரை} இவனுடையதாகவே இருந்தது.
அநீதிகளுக்கு துணைபோகாதவன். இதனால் சமீப காலமாக ஆலயத்தின் உள்ளே செல்வதையும் தவிர்த்திருந்தான்.
எந்த ஆலயத்திற்கு சென்றாலும் மணிக்கணக்காக இருந்து தியானிப்பான்.
கண்ணன் ஆலயத்திற்கு வெளியே, வேப்பமரத்திற்கு முன்னால் தேங்காய் மேல் கற்பூரத்தை ஏற்றி வைத்துக்கொண்டு தியானிப்பான்.
பல இரவுகள் இவனைத்தாண்டியே நான் ஆலயத்திற்கு சென்று வணங்கவேண்டியிருந்தது.
இன்றிரவு அங்கு, அவ்விடத்தில் இவன் இருக்கமாட்டான்.😥
வாழ வழிகள் ஆயிரம் இருக்கு நண்பா. இவ்வாறு முடிவெடுக்கக்கூடியவன் அல்லன் நீ. என்ன நடந்தது?
உன் விதியின் முடிவை எண்ணி
உன் உற்ற நண்பர்களே அங்கலாய்க்கின்றனர்.
வடக்கில் இந்த ஆண்டு நேற்றுவரை 80 தற்கொலைகள். இதை எப்படி தடுப்பதென நேற்றிரவு வரை நாம் சிந்தித்துக்கொண்டிருக்க எம்மோடிருந்த நீ 81 ஆவதாக போய்விட்டாயே😥.
நீ இல்லை என்பதை ஏற்க மனம் மறுக்கிறது. உள்ளம் வலிக்கிறது. எனக்கு மட்டுமல்ல எம் எல்லோருக்கும்.
கண்ணனின் திருநாமம் கொண்டவனே…. அவனோடு நித்தியமாய் இளைப்பாறு.🙏





