புதினங்களின் சங்கமம்

புதுக்குடியிருப்பில் கட்டிப்பிடித்து உருண்ட விதானையும் குடும்ப பெண்ணும் – இருவரும் பொலிசாரால் கைது!

புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் 16.10.2020 அன்று குடும்ப பெண் ஒருவருக்கும் கிராம சேவகருக்கும் இடையில் காணிப்பிரச்சனை தொடர்பில் இடம்பெற்ற வாய்த்தர்கம் கைகலப்பாக மாறியதால் காயமடைந்த கிராமசேவகர் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை குறித்த பெண் கிராம சேவகரால் தாக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இச்சம்பவத்தினை தொடர்ந்து இருவரும் 17.10.2020 அன்று புதுக்குடியிருப்பு பொலீசாரால் கைதுசெய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.
இருவரையும் பி ணையில்விடுதலை செய்த மன்று இவர்கள் மீதான வழக்கு விசாரணையினை நவம்பர் 16 ஆம் திகதிதிக்கு திகதியிட்டு அறிவித்துள்ளது.