எனது மகள் உயிரோடு இருப்பதை விட மரணிப்பதே நல்லது!!
உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காவு கொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை. ஆரம்பத்தில் ஒரு தடவை உள்ளெடுத்துப் பார்ப்போம் என்று ஆசைப்பட்டவர்கள்தான் இன்று மிகப் பெரிய போதை வஸ்து பாவனையாளர்களாக மாறி அதிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கிறார்கள். இந்த போதைப்பொருளுக்கு அடிமையானால் உங்கள் எதிர்காலம் ஏன் உங்கள் உயிருக்குக் கூட உத்தரவாதமில்லை என்பதைத்தான் நான் மேலே சொன்ன சம்பவம் உணர்த்துகிறது.
அன்பின் பெற்றோர்களே, உங்கள் குழந்தைகள் நல்லவர்கள்தான், ஆனால் அவர்களை வேட்டையாடுவதற்கு பல பிணந்தின்னி கழுகுகள் அலைந்து கொண்டிருக்கின்றன. உங்களது பிள்ளைகளை கவனமாக அவதானியுங்கள். அவர்களுடன் அன்பாகப்பழகி அவர்களின் மனதில் இடம் பிடியுங்கள். உங்களிடம் அவர்கள் எதிர்பார்ப்பது உங்களது அரவணைப்பையும் உங்களின் நேரத்தையும்தான், உங்களது காசையோ சொத்தையோ அல்ல. அவர்களை மோசமான விடயங்களில் இருந்து தவிர்ந்து வாழ வழிகாட்டுவது உங்களது தலையாய கடமை என்பதை மறந்து விடாதீர்கள்.
இவ்வாறான மோசமான போதைவஸ்து பாவனைகளில் இருந்து நாமும் நமது குடும்பமும் தவிர்ந்து வாழ வல்ல இறைவன் அருள் புரிவானாக.
Dr. A.H.M. அஸ்மி ஹசன்
MBBS ( SL), MD ( Col),
விஷேட பொது வைத்திய நிபுணர்,
தள வைத்தியசாலை- காத்தான்குடி
இன்று (16.10.2020) விடிவெள்ளி பத்திரிகையில் பிரசுரமான Article
நன்றி விடிவெள்ளி

