கனடாவில் ஆபத்தான முறையில் வாகனம் மோதி மூன்று பிள்ளைகளின் தந்தை பலிகொண்ட ஓட்டுநருக்கு, அதிகபட்ச தண்டனையான ஆயுள் தண்டனை வழங்கப்பட வேண்டும் என உயிரிழந்தவரின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்டாரியோ மாகாணத்தில், ஹைவே 48 நெடுஞ்சாலையில் இந்த சோக சம்பவம் நடந்தது. மணிக்கு 80 கிலோமீட்டர் வேக வரம்பு கொண்ட வீதியில், இலங்கையைச் சேர்ந்த ஜெயவீன் கிருபானந்தன் என்ற நபர் 135 கிலோமீட்டர் வேகத்தில் தவறான திசையில் வாகனத்தை ஓட்டி வந்து மோதியுள்ளார். இதில் 35 வயதான ஆன்ட்ரூ கிறிஸ்டில்லோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது மனைவியும் மூன்று சிறுமிகளும் படுகாயமடைந்தனர். விபத்தை ஏற்படுத்திய ஜெயவீன் காயமடைந்த குடும்பத்தை காப்பாற்ற முடியாமல் தப்பியோடி, அருகிலிருந்த உருளைக்கிழங்கு தோட்டத்தில் 9 மணி நேரத்திற்கு மேலாக பதுங்கியிருந்த நிலையில்தான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இவர் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்ட நிலையில் தண்டனை விவரங்கள் நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
கனடாவில் ஆபத்தான முறையில் வாகனம் மோதி மூன்று பிள்ளைகளின் தந்தை பலிகொண்ட ஓட்டுநருக்கு, அதிகபட்ச தண்டனையான ஆயுள் தண்டனை வழங்கப்பட வேண்டும் என உயிரிழந்தவரின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்டாரியோ மாகாணத்தில், ஹைவே 48 நெடுஞ்சாலையில் இந்த சோக சம்பவம் நடந்தது. மணிக்கு 80 கிலோமீட்டர் வேக வரம்பு கொண்ட வீதியில், இலங்கையைச் சேர்ந்த ஜெயவீன் கிருபானந்தன் என்ற நபர் 135 கிலோமீட்டர் வேகத்தில் தவறான திசையில் வாகனத்தை ஓட்டி வந்து மோதியுள்ளார். இதில் 35 வயதான ஆன்ட்ரூ கிறிஸ்டில்லோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவியும் மூன்று சிறுமிகளும் படுகாயமடைந்தனர். விபத்தை ஏற்படுத்திய ஜெயவீன் காயமடைந்த குடும்பத்தை காப்பாற்ற முடியாமல் தப்பியோடி, அருகிலிருந்த உருளைக்கிழங்கு தோட்டத்தில் 9 மணி நேரத்திற்கு மேலாக பதுங்கியிருந்த நிலையில்தான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இவர் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்ட நிலையில் தண்டனை விவரங்கள் நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.








