கிளிநொச்சி, கோணாவில் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த நந்தினி என்பவள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இவள் பாடசாலை மாணவர்கள், சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இவளது இரண்டாவது கணவன் மற்றும் மகன் ஆகியோரும் போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது.
இவளது சட்டவிரோத செயற்பாடுகளால் தமது கிராமத்தின் பெயருக்கு கலங்கம் ஏற்பட்டு வருவதுடன் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறித்த விவகாரம் தொடர்பில் கோணாவில் போலீசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் இதுவரை உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அத்துடன் இவர்களிடமிருந்து கோணாவில் போலீஸ் அதிகாரிகள் சிலர் பணத்தை லஞ்சமாக பெற்றுக்கொண்டு இவர்களுக்கு உடந்தையாக செயற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.








