கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன் மீது தாக்குதல்!
கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரதேசத்திற்குட்பட்ட காணி விவகாரம் தொடர்பில் நேரில் விசாரிப்பதற்காக சென்ற போதே தாக்குதலிற்கு உள்ளானதாக தெரியவருகிறது.
சம்பவம் இன்று மாலை 5மணியளவில் இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

